May 2022: மே மாதம் இவற்றில் எல்லாம் முக்கிய மாற்றம், விவரம் இதோ

Changes for May 1: நாளை ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதம் பல பெரிய மாற்றங்களுடன் தொடங்கப் போகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2022, 03:56 PM IST
  • எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கக்கூடும்.
  • தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • ஐபிஓவில் யுபிஐ கட்டண வரம்பு அதிகரிக்கப்படும்.
May 2022: மே மாதம் இவற்றில் எல்லாம் முக்கிய மாற்றம், விவரம் இதோ   title=

மே 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கமும் சம்பள வரவுடன் பல வித மகிழ்ச்சிகளையும் அள்ளிக்கொண்டு வருகிறது. ஆனால், மாத துவக்கத்தில் மகிழ்ச்சி மட்டுமே வரும் என்றும் கூற முடியாது. 

பெரும்பாலும் மாத தொடக்கத்தில், சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். நாளை ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதமும் பல பெரிய மாற்றங்களுடன் தொடங்கப் போகிறது. மே மாதம் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

சிலிண்டர் விலை அதிகரிக்கக்கூடும்

இந்த மாத தொடக்கத்தில், காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் விலை குறித்து முடிவெடுக்கலாம். உள்நாட்டு எரிவாயுவின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

நீங்கள் அடிக்கடி வங்கிக்கு செல்லும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமான செய்தியாக இருக்கும். மே மாதத்தின் ஆரம்பம் உங்களுக்கு சற்று மோசமாக இருக்கும். மே 1 முதல் மே 4 வரை, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். 

மேலும் படிக்க | Bank Holidays May 2022: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை 

இருப்பினும், இந்த விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்ப இருக்கும். மே மாத தொடக்கத்தில்தான் நாட்டில் ஈத் பண்டிகை கொண்டாடப்படும். இது தவிர, மே மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு உட்பட 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஐபிஓவில் யுபிஐ கட்டண வரம்பு அதிகரிக்கப்படும்

மே 1 முதல் நிகழவிருக்கும் மற்ற பெரிய மாற்றங்களில் ஒன்று, சில்லறை முதலீட்டாளர்களுக்கான யுபிஐ கட்டண வரம்பு அதிகரிக்கப்படுவதாகும். செபியின் புதிய விதிகளின்படி, மே 1க்குப் பிறகு ஒரு நிறுவனத்தின் ஐபிஓ-வில் முதலீடு செய்ய, யுபிஐ மூலம் பணம் செலுத்தும்போது ரூ.5 லட்சம் வரை ஏல தொகையை (பிட்) சமர்ப்பிக்கலாம். தற்போது இந்த வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது. 

ஐபிஓ-வில் முதலீடு செய்ய யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை செபி, 2018 நவம்பர் மாதம் வழங்கியது. இது ஜூலை 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. 

மேலும் படிக்க | Akshaya Tritiyai 2022: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் SBI-ல் பம்பர் கேஷ்பேக் சலுகை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News