தற்போது சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வேலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி, அதிலிருந்து விடுபட, புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஏராளம். பொதுவாக சொந்த தொழிலைத் தொடங்க நிறைய பணம் தேவை என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. சிறிய முதலீட்டில் கூட அதிக பணம் சம்பாதிக்கலாம். இன்று நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப் போகும் வணிகம் மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸ். அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கலுடன், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் மிக வேகமாக அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மொபைல் மற்றும் அது தொடர்பான பாகங்களுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. இந்த வணிகத்தின் சிறப்பு என்னவென்றால், இது சீசன் பிஸினஸ் இல்லை. இந்த பிஸினஸ், வருடத்தின் 12 மாதங்களிலும் உங்களுக்கு லாபத்தை அளிக்கும்.
தொழிலைத் தொடங்க தேவையான முதலீடு
ஸ்மார் போன் பயன்படுத்துப்பவர்களுக்கு பல அசஸெரீஸ் தேவை. சார்ஜர், இயர்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர், மொபைல் ஸ்டாண்ட், சவுண்ட் ஸ்பீக்கர் போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் விற்று நன்றாக சம்பாதிக்கலாம். மொபைல் ஆக்சஸரீஸ் தொழிலைத் தொடங்க நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை. ரூ.5,000 முதல் 10,000 வரை இருந்தாலே இதைத் தொடங்க முடியும். ஒரே நேரத்தில் நிறைய பொருட்களை வாங்காமல், ஒவ்வொரு வகையிலும் கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை வாங்குங்கள். இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் சந்தையின் தேவைக்கேற்ப அந்த பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இந்தத் தொழிலைத் தொடங்க பெரிய கடை எதுவும் தேவையில்லை. சாலையோரக் கடையில் இருந்தும் இந்தத் தொழிலைத் தொடங்கலாம். பகுதி நேரமாகவும் இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.
மேலும் படிக்க | இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம், சாமானியர்களுக்கு நேரடி தாக்கம்
பிஸினஸில் கிடைக்கும் வருமானம்
மொபைல் பாகங்கள் வணிகம் உங்களுக்கு மிகவும் இலாபகரமான வணிகமாக இருக்கும். இந்தத் தொழிலில் ஒவ்வொரு மாதமும் முதலீட்டில் 3 முதல் 4 மடங்கு அதாவது 40,000 முதல் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இந்த வணிகத்தில், வருமானம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை இருக்கலாம். இதனுடன், இந்தத் தொழிலில் வருமானம் அதிகரிக்கும் போது, நீங்கள் அதை பெரிய அளவில் தொடங்கலாம். வருமானம் பெருக பெருக திட்டமிட்டு தொழிலை விரிவுபடுத்தலாம்.
மேலும் படிக்க | வெல்லத்தில் கலப்படம்: பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ