கொல்கத்தாவில் பெண்களுக்கு என பிரத்யேக ‘பிங்க் கேப்’ சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் மம்தா பானர்ஜி!!
நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல அநீதிகள் நடக்கிறது. பெண்களுக்கு பேருந்தில், ரயிலில், காரில் என அனைத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், பாலியல் தும்புருத்தளுக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், பெண்களுக்கு என்றே பிரத்தியேகமான PINK CAB என்ற சேவையை கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கி வைத்துள்ளார். நாம் வழக்கமாக ஆப் மூலம் வழக்கமான கேப் (cab) பதிவு செய்யும் முறையை போன்றது தான் ‘பிங்க் கேப்’ சேவையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் பிங்க் நிற வாகனங்கள் முற்றிலும் பெண்களுக்காக மட்டும் பெண்களால் இயக்கப்படும் சேவை ஆகும். இந்த வாகனத்தில் பெண்கள் மட்டும் ஓட்டுனராக நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 10 கார்களை பத்து பெண்களின் பொறுப்பில் ஒப்படைத்த முதல்வர் மம்தா பானர்ஜி, “பெண்கள் ஓட்டுநர் சீட்டை நோக்கியும் முன்னேற வேண்டியதற்கான ஊக்கம் இது” எனக் கூறினார்.
மேலும் மேற்கு வங்கத்தில் பெண் வாகன ஓட்டிகளுக்கான மானியத்தை ’கதிதாரா திட்டம்’ மூலம் 1 லட்சம் ரூபாயிலிருந்து 1.5 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தியுள்ளார் மம்தா. கதிதாரா திட்டம் என்பது இளைஞர்களுக்கு போக்குவரத்துத் துறை மூலம் சுயமாக வாகனங்கள் வாங்கி தொழில் செய்ய ஊக்குவிக்கும் மாநில அரசின் திட்டமாகும்.
My heartiest congratulations also to the sisters for taking up the steering in their own hands for pink cab service.
We have taken decision to enhance subsidy under our Gatidhara scheme for women entrepreneurs for Pink Cabs pic.twitter.com/QCb0naUtY4
— Mamata Banerjee (@MamataOfficial) February 20, 2019
மேலும், இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டர் பக்கத்தில் "pink வண்டி சேவைக்காக தங்களுடைய கைகளில் ஸ்டீரிங் எடுத்துக் கொள்வதற்காக சகோதரிகளுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். பிங்க் கேப்-ற்கான பெண்களுக்கு தொழில் வழங்குபவர்களுக்கு நமது கதிதர திட்டத்தின் கீழ் மானியத்தை அதிகரிக்க முடிவு எடுத்தோம்" என குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திலும் எலெக்டெரிக் வாகனங்களை உபயோகப்படுத்த மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.