Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன

தங்க நகை விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 09:10 AM IST
  • ஜூன் 16 முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம்
  • தங்க ஹால்மார்க்கிங் ஒரு தூய்மை சான்றிதழ்.
  • நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க்
Gold Hallmark: 91.6 ஹால்மார்க் என்றால் என்ன; பயன்கள் என்ன title=

நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் ஹால்மார்க் (Hallmark) முத்திரையை கட்டாயமாக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் செய்யபட்டுள்ளது. 

தங்க நகை (Gold) விற்பனையாளர்கள் இனி, 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். மேலும் இந்திய தர நிர்ணய அமைப்பு BIS சான்றான ஹால்மார்க் (Hallmark) முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும். நாடு முழுவதும், தற்போது 234 மாவட்டங்களில் 892 ஹால்மார்க் மதிப்பீடு மற்றும் முத்திரை வழங்கும் மையங்கள் உள்ளன. சுமார் 35,879 நகைக்கடைகள் இதில் பதிவு செய்துள்ளன. 

ALSO READ | Hallmark On Gold: தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: இன்று முதல் அமல்

இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அனைத்து நகைக்கடைக்காரர்களும் தற்போது, ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஹால்மார்க்கிங் என்றால் என்ன?
தங்க ஹால்மார்க்கிங் திட்டத்தை செயற்படுத்த இந்திய அரசாங்கம், இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS) என்ற ஒரேயொரு முகவாண்மையை நியமித்துள்ளது. BIS ஹால்மார்க்கிங் திட்டமானது, சுயவிருப்பத்தின் பேரிலானது. Bureau of Indian Standards சட்டத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நகை உற்பத்தியாளர்களுக்கு BIS ஆல் சான்றளிக்கப்படுவதுடன், அவ்வாறு சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளர்கள் தங்களது நகைகளுக்கு BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அஸேயிங் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்திலும் ஹால்மார்க் தர முத்திரையைப் பெறலாம்.

BIS ஹால்மார்க் வாங்குகின்ற நகையின் தூய்மையை, குறிப்பாக தங்கத்துடன் சேர்க்கப்பட்ட உலோகக் கலவையின் அளவை உறுதிசெய்துகொள்ள முடியும். 

BIS விதிகளின் படி, எந்தவொரு ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகையும், கீழ்கண்ட 4 அடையாளக் குறிகள் அல்லது ஹால்மார்க் சின்னங்களைக் கொண்டிருக்க வேண்டும்:

இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (BIS)
இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு வரையறுத்துள்ள தரங்களின் படி ஹால்மார்க்கிங் மற்றும் அஸேயிங் செய்யப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது.

காரட் மதிப்பில் தங்கத்தின் தூய்மை மற்றும் நுண்மை
இந்தியாவில் ஹால்மார்க்கிங் ஆனது, 22 காரட், 18 காரட் மற்றும் 14 காரட் ஆகிய 3 தர நிலைகளுக்கு மட்டுமே ஹால்மார்க்கிங் அளிக்கப்படுகிறது. ஆகவே, 22 காரட் தங்கமானது 22k 916 என்று சான்றளிக்கப்படும். நீங்கள் வாங்கப்போகும் தங்கத்தின் தூய்மையை அறிய இந்தச் சின்னத்தைப் பாருங்கள்.

தங்க ஹால்மார்க்கிங் மையத்தின் குறி
தங்க நகையானது BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்த அஸேயிங் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தால் சோதிக்கப்பட்டு ஹால்மார்க் செய்யப்பட்டதோ, அந்த மையத்தின் லோகோவை தங்கம் வாங்கும் தனிநபர்கள் சோதிக்க வேண்டும்.

BIS சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளரின் அடையாளக் குறி
BIS சான்றளிக்கப்பட்ட நகை உற்பத்தியாளரின் ஒரு அடையாளக் குறி, ஹால்மார்க் தங்கத்தில் இடப்பட்டிருக்கும். , BIS இணையதளத்தில் இந்தியாவிலுள்ள ஹால்மார்க் ஜூவல்லர்களின் முழு பட்டியலைக் காண முடியும்.

ALSO READ | தங்கத்தின் விலையில் உயர்வு, வெள்ளியின் விலையும் உயர்ந்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News