3000 புலிகளைக் கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களுள் ஒன்று என்று நாம் பெருமையுடன் கூறலாம் என பிரதமர் மோடி பெருமிதம்!!
மெடுக்காக சுற்றித்திரியும் புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன. இதனாலேயே புலிகள் கொடிக்கப்பல் உயிரினம் என அழைக்கப்படுகிறது.
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். இதையடுத்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி; 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, நாட்டில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
PM Narendra Modi: Today, we can proudly say that with nearly 3000 tigers, India is one of the biggest and safest habitats in the world. #InternationalTigerDay pic.twitter.com/Dmf1Xp83N4
— ANI (@ANI) July 29, 2019
இந்தியாவில் 2022 ஆம் ஆண்டுக்குள் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்று 9 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்த கணக்கெடுப்பு அறிக்கையானது ஒவ்வொரு இந்தியனையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில் உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.