உங்களுக்கு வங்கியில் பணி புரிய விருப்பம் இருந்தால், Axis Bank அதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. அடுத்த 1 ஆண்டில் ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்காக வங்கி 'கிக்-எ-வாய்ப்புகள்' (Gig-a-oppurtunities) முயற்சியைத் தொடங்கியுள்ளது. இந்த மாதிரியின் கீழ், திறமையான பணியாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வங்கியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.
இந்த மாதிரியில் பணிபுரிய இரண்டு வழிகள் இருக்கும் – ஒன்று நிலையான வேலை, மற்றொன்று, பனிதிட்டத்தை பொறுத்து குறுகிய காலத்திற்கு வேலை. Axis Bank –ன் நிர்வாக இயக்குநர் (கார்ப்பரேட் சென்டர்) ராஜேஷ் தஹியா, இதில் பல பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் என்றும் இதை வழக்கமான பணிகளைப் போல திறம்பட செய்ய விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, அடுத்த 1 ஆண்டில், இந்த மாதிரியில் பணிபுரிய 800-1,000 பேர் வரை சேர்க்கப்படுவார்கள். அலுவலக பணிகளைப் புரிய அலுவலகத்திற்கு கண்டிப்பாக வர வெண்டும் என்ற மனநிலை முன்பு இருந்தது. ஆனால் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்யப்படுவது (Work from home) பல விஷயங்களை மாற்றிவிட்டது.
ALSO READ: நல்ல செய்தி! 40 ஆயிரம் புதிய வேலைகளை வழங்கும் இந்த நிறுவனம்
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு முன்பு மக்கள் தயங்குவர் என்று தஹியா கூறினார். ஆனால் இப்போது அவர்கள் அதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இளைஞர்கள், அனுபவம் வாய்ந்த நடுத்தர அளவிலான தொழில் வல்லுநர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெண்கள் உள்ளிட்ட நல்ல திறமைசாலிகளை வங்கி தேர்ந்தெடுக்கும்.
Axis Bank -ன் பல கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களும் உள்ளன. எஃப்.டி மீதான வட்டி விகிதங்களை (Interest Rates) வங்கி மாற்றியது. வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி-ஐ அளிக்கிறது. மூத்த குடிமக்களுக்கு வங்கி FD க்கு அதிக வட்டி அளிக்கிறது.
வட்டி விகிதங்களில் புதிய மாற்றத்திற்குப் பிறகு, வங்கி 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை மெச்சூரிடியுடன் எஃப்.டி.யில் 2.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 30 முதல் 45 நாட்களுக்கு 3.50% மற்றும் 46 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கு இடையில் 4% வட்டி, FD க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: 10 வது தேர்ச்சியா நீங்கள்.. ரயில்வேயில் 4500 காலியிடங்கள்; இந்த வழியில் விண்ணப்பிக்கவும்