SBI ATM Withdrawal Rules: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இப்போது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும் முறையை மாற்றியுள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்க OTP சேவையை அந்த வங்கி தொடங்கியுள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க இந்த பெரிய மாற்றத்தை செய்துள்ளது. விரைவில் இந்த விதி, எஸ்பிஐ ஏடிஎம்களிலும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பாக செயல்படும்.
வங்கியின் கூற்றுப்படி, பரிவர்த்தனையை முடிக்கும்போது, வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது OTP எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் ATM பயனர் சரியான பயனர் என்பதை உறுதிப்படுத்துகிறது. OTP என்பது கணினியால் உருவாக்கப்பட்ட நான்கு இலக்க எண்ணாகும். அதை வங்கி வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இந்த OTP பணம் திரும்பப் பெறுவதை அங்கீகரிக்கும். இந்த OTP ஒரு பரிவர்த்தனைக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
தொடர் விழிப்புணர்வு
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கில் இருந்து பணத்தை OTP மூலம் பெறும் சேவையைத் தொடங்கியது. எஸ்பிஐ அவ்வப்போது சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்கள் மூலம் ஏடிஎம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சேவையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | பணத்தை முதலீடு செய்ய மிக பாதுகாப்பான வங்கிகள் குறித்த RBI பட்டியல்!
இனி ஏடிஎம் கார்டு மட்டும் போதாது!
இப்போது இந்த சேவை, SBI வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் நேரத்திலும் வரும். அதிகரித்து வரும் மோசடி, சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு எஸ்பிஐ இந்த விதிகளை உருவாக்கியுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ஒரே பணப் பரிமாற்றத்தில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் எடுக்கும் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை முடிக்க OTP தேவைப்படும் என கூறப்படுகிறது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது உங்கள் டெபிட் கார்டு, மொபைல் போன் ஆகியோவை கையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எஸ்பிஐ வங்கியை பயன்படுத்தும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பலன் அளிக்கக்கூடிய வசதியை அந்த வங்கி விரைவில் அறிமுகப்படுத்தும் என தெரிவித்திருந்தது. அதாவது, வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) மூலமாக வங்கி நிர்வாகியிடமோ அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்திலோ கண்டறிய முடியும். எஸ்பிஐ நிறுவனத்திடம் இருந்து 'IRIS ஸ்கேனர்' என்ற அடையாள வசதியை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | எஸ்பிஐ வங்கி செய்த அதிரடி மாற்றங்கள்! இனி இந்த சேவைகள் இல்லை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ