வாஸ்து சாஸ்திரம்: ‘இந்த’ திசையில் கடிகாரத்தை வைக்கக் கூடாது!

மனித வாழ்வில் நேரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. குறித்த நேரத்தில் வேலை செய்து முடிப்பது மிகவும் முக்கியம் என்பது வழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களின் பொதுவான கருத்து எனலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 26, 2022, 04:46 PM IST
  • எதிர்மறை ஆற்றலால் பாதிப்பு ஏற்படும்.
  • வீட்டில் வறுமை வந்து சேரும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும்
வாஸ்து சாஸ்திரம்: ‘இந்த’ திசையில் கடிகாரத்தை வைக்கக் கூடாது! title=

புதுடெல்லி: மனித வாழ்வில் நேரத்துக்கு தனி முக்கியத்துவம் உண்டு. நேரத்துக்கு ஏற்ப செயல்படுவதும், குறித்த நேரத்தில் வேலை செய்வதும், அனைவருக்கும்  தேவையான ஒரு குணம். குறித்த நேரத்தில் வேலை செய்து முடிப்பது மிகவும் முக்கியம் என்பது வழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களின் பொதுவான கருத்து எனலாம். 

வாஸ்து சாஸ்திரத்தில், கடிகாரத்திற்கு என சில முக்கியத்துவம் உள்ளது. அதன் கீழ், கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவது மட்டுமல்ல, கடிகாரம் ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது. கடிகாரம் இல்லாத வீடு அல்லது அலுவலகத்தை பார்க்கவே முடியாது. 

இந்நிலையில், கடிகாரத்தை வைப்பதற்கு முன், அது சரியான திசையில் வைக்கப்பட்டுள்ளதா, அத்சற்கான வாஸ்து விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.  கடிகாரம் எந்த திசையில்  வைத்தால் நல்ல பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

ALSO READ | சனியின் வக்ர நகர்வு: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடி வரலாம் 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடகிழக்கு திசையின் சுவரில் கடிகாரம் வைப்பது மங்களகரமானது. இதற்குக் காரணம், கிழக்கு மற்றும் வடக்கு திசையில் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக நம்பிக்கை உள்ளது. இந்த திசைகளில் கடிகாரத்தை வைப்பது சிறந்த பலன்களைத் தரும். மேலும், உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். 

கிழக்கு திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம் வீட்டிற்கு அன்னை லட்சுமி தேவி வீட்டிற்உ வருகை தருவாள் என நம்பப்படுகிறது. இது தவிர வீட்டில் வசிக்கும் உறுப்பினர்களின் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும். 

ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 

அதே நேரத்தில், வீட்டின் அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் கடிகாரத்தை  பொருத்த க்கூடாது, ஏனெனில் இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம், எதிர்மறை ஆற்றலின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கவதாக கூறப்படுகிறது. எனவே, கடிகாரத்தை ஒருபோதும் தெற்கு திசையின் சுவரில் வைக்கக் வேண்டாம்.

அதே போன்று வீட்டின் எந்த கதவுக்கும் மேலே உள்ள சுவற்றில் கடிகாரம் பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்றவும். இதுவும் எதிர் மறை ஆற்றலுக்கு வலு சேர்க்கும். இது தவிர, வீட்டில் ஏதேனும் கடிகாரம் ஓடாத நிலையில் கிடந்தாலோ அல்லது பழுதடைந்திருந்தாலோ, அல்லது உடைந்து இருந்தாலோ, அதையும் அகற்றவும். உண்மையில், மோசமான அல்லது நிறுத்தப்பட்ட கடிகாரத்தின் கைகள் எதிர்மறை ஆற்றலைக் குறிக்கின்றன.

ஓடாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பதால், பணப் பிரச்சனை ஏற்படும் என  வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதாவது கடிகாரம் ஓடாமல் நிற்பதை போல், மனித வாழ்க்கை ஸ்தம்பித்து போகலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 

மேலும், வீட்டில் அல்லது அலுவலகத்தில் சிவப்பு, கருப்பு அல்லது நீல நிற கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. அதே நேரத்தில் மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வைப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

Also READ | முக்கிரக சேர்க்கையால் பலனடையும் 3 ராசிகள்! நீங்கள் எந்த ராசிக்காரர்? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News