'அர்ஜூன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்! முக்கிய அறிவிப்பு இதோ!

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 2, 2018, 10:42 AM IST
'அர்ஜூன் ரெட்டி' ஹிந்தி ரீமேக்! முக்கிய அறிவிப்பு இதோ! title=

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது ஹிந்தி ரீ-மேக்கில் நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படம், 2019-ம் ஆண்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

 

 

Trending News