பெட்ரோல் பம்ப் மோசடியில் பாதித்து நொந்தவரா நீங்கள்? எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பம்புக்கு போய் எரிச்சலுடன் திரும்பி வந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறதா? கவலையே வேண்டாம். இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், பெட்ரோல் பம்பில் ஏமாறாமல் இருக்கலாம்.
பெட்ரோல் பம்ப் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெட்ரோல் பம்புகளில் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயரும் எரிபொருள் விலைகள் கொடுக்கும் கவலை ஒருபுறம் என்றால், அங்கு ஏமாற்றப்பட்டால் அதில் வரும் எரிச்சல் மறுபுறம். பாவம் சாதாரண மனிதன் என்ன செய்வான்?
அதிகரிக்கும் எரிபொருள் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது நம் கையில் இல்லையென்றாலும், பெட்ரோல் பம்ப்பில் மோசடி செய்யப்படுவதைத் தவிர்ப்பது நம் கையில் தான் இருக்கிறது. பெரும்பாலான பம்புகளில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற பெட்ரோல் வழங்கப்படுவதில்லை, ஏமாற்றப்படுகிறார்கள்.
ALSO READ | Fuel vs GST: பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வருமா? வந்தால் அதன் தாக்கம் என்ன?
பெட்ரோல் பம்ப் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெட்ரோல் பம்புகளில் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கும் முத்தான ஐந்து உதவிக் குறிப்புகள்…
மீட்டர் சோதனை
பெட்ரோல் பம்ப் பணியாளர், எரிபொருளை நிரப்பத் தொடங்குவதற்கு முன்பு மீட்டர் 0 ஆக இருப்பதை உறுதிசெய்துக் கொள்ளவும்.. உங்கள் வாகனத்தில் எப்போது எரிபொருள் நிரப்பினாலும், மீட்டரைக் கவனியுங்கள். காருக்குள் இருக்கும்போது நீங்கள் மீட்டரை பார்க்க முடியாதபடி பணியாளர் நிற்கலாம். எனவே காரில் இருந்து இறங்கி மீட்டர் மீட்டமைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
வடிகட்டி காகித சோதனை (Filter paper test)
1986 ஆம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வடிகட்டி ஆவணங்களை பெட்ரோல் பம்புகள் சேமித்து வைக்க வேண்டும். எரிபொருள் கலப்படம் செய்யப்படுகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க ஒரு நுகர்வோர் வடிகட்டி காகித சோதனையைக் கேட்டால், பெட்ரோல் பம்ப் அதை கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.
அந்த ஃபில்டர் காகிதத்தில் சில துளிகள் பெட்ரோல் விடவும். அது எந்தவொரு கறையையும் ஏற்படுத்தாமல் ஆவியாகிவிட்டால், பெட்ரோல் தூய்மையானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். ஆனால், அந்த காகிதத்தில் விட்ட பெட்ரோல் ஆவியான பிறகு சில கறைகள் இருந்தால், கலப்படம் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது. எனவே நீங்கள் அங்கு எரிபொருளை நிரப்பாமல் வேறு பம்புக்கு சென்று பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம். நீங்கள் ஏமாறாமல் இருக்க இது ஒரு சிறந்த வழிமுறை ஆகும்.
ALSO READ | Bizarre Whisky! ஒரு பாட்டில் விஸ்கி விலை 1 கோடி ரூபாய்! டாஸ்மாக்கே பரவாயில்லை!
சில நேரங்களில், பெட்ரோல் பம்புகளில் கொடுக்கும் பணத்துக்கு குறைவான எரிபொருளையே பெறுகிறார்கள். வாகன ஓட்டிகள் கொடுக்கும் பணத்துக்கு 'தவறுதலாக' குறைந்த எரிபொருளை நிரப்பும் தவறை பல பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் செய்கின்றனர்.
உதாரணமாக, 1,500 ரூபாய்க்கு எரிபொருள் போடச் சொன்னால் 500 ரூபாய்க்கு மட்டுமே நிரப்புவார். நீங்கள் அதை கவனித்து சொன்னால், சாரி என்று சொல்லிவிட்டு இயந்திரத்தை மீட்டமைப்பதாக நடித்து 1,000 வரை நிரப்புவார். அப்போதும் 500 ரூபாய் ஏமாற்றப்படுகிறது. ஆனால்1,500 மதிப்புள்ள எரிபொருள் உங்களுக்கு கொடுக்கப்பட்டது என்ற நினைப்பில் நீங்கள் இருப்பீர்கள்.
உங்கள் வீடு மற்றும் பணியிடத்திற்கு அருகிலுள்ள பிரபலமான பெட்ரோல் பம்பில் எரிபொருள் நிரப்புவது எப்போதும் நல்லது. அவசரமாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லாவிட்டால். கட்டணம் செலுத்திய பிறகு அச்சிடப்பட்ட பில்லை கேட்டுப் பெறுங்கள். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமே பணம் செலுத்துவது நல்லது.
உங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டதும், அளவு தொடர்பாக சந்தேகம் எழுந்தால் அளவை பரிசோதிக்கவும். பெட்ரோல் பம்புகளில் அளவீட்டுத் துறையால் வழங்கப்படும் 5 லிட்டர் எடை கொண்ட அளவீடுகள் அதாவது கேன்கள் இருக்கும். கேனை நீங்களே நிரப்பி சரி பார்க்கவும். அளவு குறைவாக இருந்தால், பெட்ரோல் பம்ப் மீது நீங்கள் போலீசில் புகார் செய்யலாம்.
Also Read | Sandcastle: இந்த மணல்கோட்டையை எந்த அலையும் அடித்துச் செல்லாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR