பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 72 வயது மூதாட்டியின் தீவிர உடற்பயிற்சி!

ஆனந்த் மஹிந்திரா 72 வயதான மூதாட்டி ஒருவர் தீவிர பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்!!

Last Updated : Dec 12, 2019, 12:27 PM IST
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த 72 வயது மூதாட்டியின் தீவிர உடற்பயிற்சி! title=

ஆனந்த் மஹிந்திரா 72 வயதான மூதாட்டி ஒருவர் தீவிர பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்!!

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா 72 வயதான மூதாட்டி ஒருவர் தீவிர பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

'நாண்டி பௌண்டேஷனின்' CEO மனோஜ் குமார் 1 நிமிடம் 28 வினாடி இருக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில், 72 வயதாகும் பாட்டி டம்பெல்  தூக்குவது, ஆப் வீல் எக்ஸர்சைஸ் தொடங்கி  வேறு பல கடினமான உடற்பயிற்சிகளையும்  செய்கிறார்.முதலில் இந்த வீடியோவை ஸர் செய்த மனோஜ் குமார்,தனது ட்வீட்டில் ‘ நான் தினசரி செய்யும் உடற்பயிற்சி,யோகாவெல்லாம் ஒண்ணுமே கிடையாது என்று என்னை யோசிக்க வைக்கிற அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.தவிர,வயது என்பது ஜஸ்ட் நம்பர் என்பதை மறுபடியும் நிரூபிக்கிறது இவரது பயிற்சி’ என்று ஆச்சர்யம் அடைந்துள்ளார்.

இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா....... "மனோஜ்! காலையில் இந்த வீடியோவை ஏன் பகிர வேண்டியிருந்தது?... இந்த இரும்புப் பெண்ணுடன் ஒப்பிடும்போது இது என்னை சோம்பேறியாகவும், மந்தமாகவும் உணரவைத்தது ... ஆ, ஒருவேளை இது நாம் நமது தினசரி உடற்பயிற்சி நடைமுறைகளைப் பற்றி சாக்குபோக்கு சொல்வதை நிறுத்த வேண்டியது மிகவும் அவசியம் என பதிவிட்டுள்ளார். 

ஆனந்த் மஹிந்திராவைப் போலவே, இணையமும் இந்த வீடியோவால் ஈர்க்கப்பட்டு,  2,000-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், பார்வையாளர்களின் கருத்துக்களையும் பெற்று வருகிறது. 

 

Trending News