பிரதமர் மோடியை தொடர்ந்து 'Man vs Wild' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்!

டிஸ்கவரி சேனலில் பிரபல நெறியாளர் பியர் கிரில்ஸுடன் ஆவணப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

Last Updated : Jan 28, 2020, 12:44 PM IST
பிரதமர் மோடியை தொடர்ந்து 'Man vs Wild' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்! title=

டிஸ்கவரி சேனலில் பிரபல நெறியாளர் பியர் கிரில்ஸுடன் ஆவணப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சி மேன் வெர்ஸஸ் வைல்ட் ('Man vs Wild'). இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர்.

அந்தவகையில் ஏற்கனவே பிரதமர் மோடி, அவருடன் இணைந்து காடுகளில் பயணம் செய்த ஆவணப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. மேன் வெர்ஸஸ் வைல்ட் ('Man vs Wild') நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

இந்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் இணைந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் ஆவணப்படத்தில் நடித்து வருகிறார்.. இந்த ஆவணப்படத்தை முப்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நரேந்திர மோடியை அடுத்து இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கொண்டுள்ளார் ரஜினிகாந்த். 

 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News