ஆதார் அட்டை போல் திருமணத்தின் மெனு கார்டை வடிவமைத்த ஜோடி; வைரலாகும் புகைப்படம்

ஒரு மேற்கு வங்க தம்பதியினர் தங்கள் விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அவர்கள் புதுமையான முறையின் தயாரித்த திருமண விருந்திற்கான  மெனு கார்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 4, 2021, 08:37 PM IST
  • தற்போது திருமண விழாவில், பல புதுமைகள் புகுத்தப்படுவதை காண்கிறோம்.
  • மக்களின் கற்பனை வளம் மூலம், பல வித புதுமைகள் படைக்கப்படுகின்றன.
  • ஆதார் அட்டை போல வடிவமைக்கப்பட்ட அவர்களின் திருமண விருந்துக்கான மெனு அட்டை, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆதார் அட்டை போல் திருமணத்தின் மெனு கார்டை வடிவமைத்த ஜோடி; வைரலாகும் புகைப்படம் title=

தற்போது திருமண விழாவில், பல புதுமைகள் புகுத்தப்படுவதை காண்கிறோம். மக்களின் கற்பனை வளம் மூலம், பல வித புதுமைகள் படைக்கப்படுகின்றன.

திருமணத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் இடம், , ஆடை, கார்டு என அனைத்திலும் புது புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இது போன்ற ஒரு  புதுமையான முயற்சியின்ப் மூலம் மேற்கு வங்க தம்பதியினர் தங்கள் விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். ஆதார் அட்டை (Aadhaar Card) போல வடிவமைக்கப்பட்ட அவர்களின்  திருமண விருந்துக்கான மெனு அட்டை, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஜோடி முதலில் இந்த அட்டையை பேஸ்புக்கில் (Facebook) பகிர்ந்துகொண்டது. பின்னர் அது அனைத்து சமூக ஊடக தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இந்தியா.காம் என்ற செய்தி ஊடகத்திடம் பேசிய இந்த தம்பதியினரான - கோகோல் சஹா மற்றும் சுபர்ணா தாஸ் - தங்கள் திருமண விருந்துக்கான மெனு அட்டை மக்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

இதுபோன்ற ஒரு புதுமையான மெனு கார்டை அவர்கள் எவ்வாறு திட்டமிட்டார்கள் என்று கேட்டபோது, ​​சஹா தனது மனைவிக்கு தான் இந்த யோசனை வந்தது என பெருமையாக கூறினார், “இது என் மனைவி சுபர்ணாவின் கற்பனை, நாங்கள் இருவரும் 'டிஜிட்டல் இந்தியாவை' ஆதரிக்கும்போது இதை விட அதற்கான ஆதரவைக் காட்ட சிறந்த வழி எதுவாக இருக்கும்? ”

விருந்தினர்கள் மெனு கார்டைக் கண்டு ஆச்சரியப்பட்டதாதாகவும், இந்த திருமணங்களில் கூட ஆதார் அட்டை கட்டாயமா என்று சிலர் கேலி செய்ததாகவும் அவர் மேலும் கூறினார். “எனது ஆதார் அட்டையை டைனிங் டேபிளில் விட்டுவிட்டீர்களா என்று பலர் என்னிடம் கேட்டார்கள், இது மிகவும் வேடிக்கையான தருணம், ”என்று சஹா கூறினார்.

தம்பதியினர் திங்கள்கிழமை (பிப்ரவரி 1) திருமணம் செய்து கொண்டனர், இருவரும் கொல்கத்தாவின் ராஜர்ஹாட் பகுதியில் வசிப்பவர்கள்.

ALSO READ | விபத்தில் சிதைந்த முகம் கைகள்... முகம், கை மாற்று சிகிச்சை அளித்தது மறுவாழ்வு..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News