டேட்டிங் செய்ய விரும்பும் இந்தியர்களில் 83% நேரில் சந்திக்க விரும்புவது ஏன்?

தனியாக வசிக்கும் இந்தியர்களில் 83 சதவீதத்தினர், எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்திக்க விரும்பினால், 40 சதவீதத்தினர் 2021 ஆம் ஆண்டில் மெய்நிகர் டேட்டிங் (Virtual Dating) செய்ய விரும்புகின்றனராம்… 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 16, 2021, 11:36 PM IST
  • டேட்டிங் செய்ய விரும்பும் இந்தியர்களில் 83% நேரில் சந்திக்க விரும்புகின்றனர்
  • வீட்டில் சந்திக்க விரும்புவது 47 சதவிகிதத்தினர்
  • 41 சதவிகிதத்தினர் இரவு உணவுக்கு ஹோட்டலில் சந்திக்க விரும்புகின்றனர்
டேட்டிங் செய்ய விரும்பும் இந்தியர்களில் 83% நேரில் சந்திக்க விரும்புவது ஏன்? title=

புதுடெல்லி: தனியாக வசிக்கும் இந்தியர்களில் 83 சதவீதத்தினர், எதிர் பாலினத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்திக்க விரும்பினால், 40 சதவீதத்தினர் 2021 ஆம் ஆண்டில் மெய்நிகர் டேட்டிங் (Virtual Dating) செய்ய விரும்புகின்றனராம்… 

தனியாக இருப்பவர்களில் 2021ஆம் ஆண்டில்   எவ்வாறு டேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆச்சரியமூட்டும் விருப்பங்கள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்கத்திற்கு பிறகு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன.  

இந்த கோவிட்-19 தொற்றுநோய், தனியாக வசிக்குக்ம் இந்தியர்களுக்கு Virtual Dating எப்படி செய்வது? அதை  எப்படி சரியாக செய்வது என்றும் கற்றுக் கொடுத்தது. இது புதிதாக இருக்கலாம், ஆனால் நிதர்சனமான புதிய உண்மை. ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முதல் சமூக வலைப்பின்னல் பயன்பாடான பம்பிள் (Bumble) நடத்திய புதிய கணக்கெடுப்பின்படி, ஒற்றை இந்தியர்களில் (Indians) 83 சதவீதம் பேர் தங்கள் தொடர்புகளை நேரில் சந்திக்க விரும்புகிறார்கள். இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் ஒற்றை இந்தியர்களில் சுமார் 40 சதவீதம் பேர் மெய்நிகர் டேட்டிங்கிற்கு செல்வார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.

Also Read | இரண்டு ஆண்களுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் பெண்..!

2021 ஆம் ஆண்டில் ஒற்றை இந்தியர்கள் எவ்வாறு டேட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. இந்தியர்கள் இப்போது முன்னெப்போதையும் விட டேட்டிங் செய்ய விரும்புகின்றனர்.  

ஒற்றை இந்தியர்கள் இப்போது முதன்முறையாக மெய்நிகர் டேட்டிங் பற்றி ஆராய்ந்து, நேரில் சந்திப்பதற்கு முன்பு ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ள வீடியோ (Video) டேட்டிங்குகளை பயன்படுத்துகிறார்கள். ஒற்றை இந்தியர்களில் 78 சதவீதம் பேர் நேரில் சந்திப்பதற்கு முன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள் என்று Bumble மேற்கொண்ட ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

அதுமட்டுமல்ல, அவசரப்படாமல் ‘slow dating’ செய்ய விரும்புகிறார்களாம். அதாவது,  ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்துகொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

Also Read | WORLD'S DIRTIEST மனிதன்! 65 ஆண்டுகளாக குளிக்காத காரணம் தெரியுமா? 

நேரில் சந்திக்க விரும்புபவர்களுக்கு, தொற்றுநோய் தடையாக வந்துவிட்டது. அவர்களில் பெரும்பாலானோரின் (47 சதவிகிதம்) டேட்டிங் அணுகுமுறை மாறிவிட்டது. அதன்படி, நேரில் சநதிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்படும் இடத்தின் விருப்பமும் மாறிவிட்டது என்கிறது ஆய்வு.  அவர்களது வீட்டில், அவர்கள் டேட்டிங் செல்ல விரும்புபவரின் அல்லது நண்பரின் இடத்தில் சந்திக்க விரும்புகிறார்களாம்.  

ஒருமுறை வெளியே செல்ல நினைத்தால், உள்ளூர் ஓட்டல் / cafe/tea shopஇல் சந்திக்க விரும்புகிறார்களாம் 43 சதவீதத்தினர்.  தனியாக வசிக்கும் இந்தியர்களில் 41 சதவீதத்தினருக்கு, டேட்டிங் செய்ய விரும்புவர்களுடன் இரவு உணவு ஹோட்டலில் சாப்பிட பிடிக்கிறதாம்.   

Also Read | அடுத்த வாரம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு செல்வார்?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News