7th Pay Commission: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு மாறும்?

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாறுதல் ஏற்படப்போகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 17, 2021, 01:45 PM IST
  • ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாறுகிறது
  • மருத்துவ செலவுகள் திரும்பப் பெறுவதிலும் மாற்றம் ஏற்படும்
  • அகவிலைப்படியும் மாறும்
7th Pay Commission: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு மாறும்? title=

புதுடெல்லி: இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாறுதல் ஏற்படப்போகிறது. அது குறித்த அண்மைத் தகவல்கள் இவை.

சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance (DA)) மறுசீரமைப்பை மீண்டும் கொண்டுவருவதாக அரசாங்கம் அறிவித்ததிலிருந்து, மத்திய அரசு ஊழியர்களின் (central government servants (CGS)) ஊதியத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
 
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2021 ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படும், இது இந்த ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தப்படும்.

Also Read | இருந்த இடத்திலிருந்தே கடவுளை வணங்குக, கும்பமேளாவிற்கு வரவேண்டாம்...

7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பள கணக்கீட்டு காரணி 2.57 ஆக இருக்கும். இது வழக்கமாக ஊதியம் கணக்கிடப்படும் காரணியுடன் பெருக்கி கணக்கிடப்படும். அதோடு, அகவிலைப்படியும் அதிகரிக்கும். எனவே அரசு ஊழியர்களின் மாதாந்திர சி.டி.சி. (CTC) அதிகரிக்கும்.

சம்பளத்தை பிரித்து கணக்கிடும்போது, அகவிலைப்படி Dearness Allowance (DA), பயண கொடுப்பனவு (Travel Allowance (TA)), வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance (TA)), மருத்துவச் செலவுகள் திருப்பிச் செலுத்துதல் (medical reimbursement) என பல பிரிவுகளாக கணக்கிடப்படுகிறது.

அகவிலைப்படியுடன் பிறகு பயணக் கொடுப்பனவு (Travel Allowance (TA)) மேலும் அதிகரிக்கும், நிலுவையில் உள்ள சம்பளத் தொகையும் சேர்த்து கொடுக்கப்படும். அதேபோல் டிஏ உயர்வு மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப், கிராட்யூட்டி பங்களிப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.  

ALSO READ: 7th Pay Commission: நிலுவையில் உள்ள DA தொகை பற்றிய முக்கிய செய்தி, இப்போது கிடைக்கும் முழு தொகை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News