7th Pay Commisison: மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், இந்த தேதியில் DA ஹைக் பரிசு

7th pay commission da hike: மத்திய ஊழியர்களின் காத்திருப்பு நேரம் தற்போது முடிவுக்கு வர உள்ளது. இன்னும் சில நாட்களில் தற்போதுள்ள டிஏ விகிதங்களுடன் புதிய கட்டணங்கள் சேர்க்கப்படும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 7, 2023, 01:07 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதல் 46 சதவீதமாக உயரும்.
  • கடந்த 12 மாதங்களில் AICPI-IW இன் சராசரி 382.32 ஆகும்.
  • 3 மாத நிலுவைத் தொகையையும் சேர்த்த பிறகு பணம் செலுத்தப்படும்.
7th Pay Commisison: மத்திய ஊழியர்களுக்கு ஜாக்பாட், இந்த தேதியில் DA ஹைக் பரிசு title=

7வது ஊதியக் கமிஷன் உயர்வின் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய ஊழியர்கள் இம்முறை தங்கள் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள். ஏனெனில் கூடிய விரைவில் அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அரசு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படியில் மொத்தம் அதிர்காரிப்பு 4 சதவீதமாக உயர்த்தப்படம் என்று யூகிக்கப்படுகிறது. இதனிடையே தற்போதைய அகவிலைப்படி 42 சதவீதம் ஆகும். 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், ஜூலை 1, 2023 முதல், மத்திய ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். அதுமட்டுமின்றி ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையாக வழங்கப்படும். இதற்கு முன்னதாக கடந்த முறை அரசாங்கம் 2023 மார்ச் மாதத்தில் அகவிலைப்படியை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அகவிலைப்படி எப்போது அங்கீகரிக்கப்படும்?
பொதுவாக அக்டோபர் மாதம் தசரா பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி அதிகரிக்கப்படும். அந்த வகையில் இந்த முறையும் தசரா பண்டிகைக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆதாரங்களை நம்பினால், இந்த முறை தசராவுக்குப் பிறகு அகவிலைப்படி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி வரும் அக்டோபர் 25ஆம் தேதி அமைச்சரவையில் அனுமதி பெறலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசு தரப்பில் இன்னும் முறையான தேதி அறிவிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு எது பெஸ்ட்.. போஸ்ட் ஆபீஸ் RD ஆ? எஸ்பிஐ RD ஆ?

அக்டோபரில் சம்பளம் வழங்கப்படும்:
இந்நிலையில் 7வது ஊதியக் குழுவின்  (7th pay commission) கீழ் ஊதியம் பெறும் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் DA (அகவிலைப்படி) - DR (அகவிலை நிவாரணம்) வழங்கப்படும். ஊழியர்களின் சம்பளத்துடன் கொடுப்பனவுகள் சேர்க்கப்படும். அதே நேரத்தில், 3 மாத நிலுவைத் தொகையையும் சேர்த்த பிறகு பணம் செலுத்தப்படும். அதே நேரத்தில், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் 4 சதவீதம் கூடுதலாக செலுத்தப்பட்டு, அக்டோபர் இறுதிக்குள் வழங்கப்படும்.

அகவிலைப்படி எவ்வாறு அதிகரிக்கும்?
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலைக் குறியீட்டால் (AICPI-IW) தீர்மானிக்கப்படுகிறது. அகவிலைப்படியைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் நிலையானது. 7th CPC DA% = [{Average of AICPI-IW (Base Year 2001=100) for the last 12 months – 261.42}/261.42x100] =[{382.32-261.42}/261.42x100]= 46.24. அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது என்பது கணக்கீட்டில் தெளிவாகிறது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதல் 46 சதவீதமாக உயரும். அதன் கட்டணம் அக்டோபரில் சாத்தியமாகும்.

அகவிலைப்படி 4.24 சதவீதம் அதிகரித்துள்ளது:
கடந்த 12 மாதங்களில் AICPI-IW இன் சராசரி 382.32 ஆகும். சூத்திரத்தின்படி, மொத்த அகவிலைப்படி 46.24% ஆக இருக்கும். தற்போதைய அகவிலைப்படி விகிதம் 42% ஆகும். அத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1, 2023 முதல், டிஏவில் 46.24%-42% = 4.24% அதிகரிக்கும். அகவிலைப்படி தசமத்தில் வழங்கப்படாததால், அகவிலைப்படி 4 சதவீதம் வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மத்திய அரசின் கீழ் உள்ளவர்கள் மற்றும் 7வது ஊதியக்குழுவின் ஊதியக்குழுவில் வருபவர்கள் மட்டுமே இது வழங்கப்படும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே வெளியிட்ட செம டூர் பேக்கேஜ்.. இதோ அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News