கட்டிலில் அமர்ந்து கொண்டு சம்பாதிக்க 5 வழிகள்

வீட்டில் அமர்ந்து கொண்டே சம்பாதிக்கும் 5 வழிகளை இங்கே தெரிந்து கொள்வோம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2022, 07:11 PM IST
கட்டிலில் அமர்ந்து கொண்டு சம்பாதிக்க 5 வழிகள் title=

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் முறை அல்லது ஆன்லைன் மூலம் சம்பாதிக்கும் வழிகளை மக்கள் அதிகம் தேடத் தொடங்கியிருக்கின்றனர். ஆன்லைன் வழியாகவும், அவரவர் திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் 5 வழிகளை மட்டும் இங்கே காணலாம். 

1. கைவினை பொருட்கள் 

கைவினை பொருட்கள் செய்வதில் நீங்கள் வல்லவராக இருந்தால், அந்த பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து சம்பாதிக்க முடியும். பிளிப்கார்ட், அமேசான் மற்றும் Etsy போன்ற தளங்கள் உங்கள் பொருட்களை விற்பனை செய்ய தயாராக இருக்கின்றன. நல்ல புகைப்படங்ள் மற்றும் விளகங்களை பொருட்களுக்கு கீழே கொடுப்பது அவசியம். 

மேலும் படிக்க | ITR Filing Rules: விதிகளில் பெரிய மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம்

2. ஆன்லைன் சர்வே

ஆன்லைன் சர்வே மூலம் நீங்கள் சம்பாதிக்க முடியும். பல்வேறு பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் குறித்து ஆன்லைன் மூலம் சர்வே செய்து நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். சில பொருட்களுக்கு நீங்கள் தரமான கருத்துகளை கொடுத்தீர்கள் என்றால், அந்த நிறுவனங்கள் உங்களுக்கு பணம் கொடுக்க தயாராக இருக்கின்றன. 

3. புத்தகங்கள் விற்பனை

நீங்கள் மாணவர் மற்றும் பட்டதாரியாக இருந்தால், உங்களுக்கு தேவையில்லாத அல்லது படித்து முடித்த புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம். அந்த புத்தகங்களை அலமாரியில் வைத்து கரையான் அரிக்க விடாமல், ஆக்கப்பூர்மாக விற்பனை செய்து பணத்தை சம்பாதிக்க முற்படுவதும் ஒருவகையான சரியான வழிமுறை. 

4. மெய்நிகர் உதவியாளர் 

உங்களுக்கு நிர்வாகத் திறமையும் வாடிக்கையாளர் சேவையில் திறமையும் இருந்தால், நீங்கள் மெய்நிகர் உதவியாளராக பணியாற்றலாம்.  வீட்டில் இருந்தபடியே பணியாற்றக்கூடிய இந்த வாய்ப்பில், வாடிக்கையாளர் சேவை, சமூக ஊடக மேலாண்மை உள்ளிட்ட பணிகள் அடங்கும். Upwork அல்லது Fiverr போன்ற தளத்தில் இதற்கான பணிகள் இருக்கின்றன.

மேலும்படிக்க | கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி

5. வாடகை மூலம் சம்பாதித்தல்

உங்களிடம் கூடுதலாக அறை அல்லது வீடு மற்றும் அப்பார்ட்மென்ட் இருந்தால் Airbnb வலைதளம் மூலம் பதிவு செய்து சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடலாம். உலகம் முழுவதும் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உங்கள் வீட்டில் தங்கிக் கொள்வார்கள். இதன் மூலம் நீங்கள் சம்பாதிக்க முடியும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News