Morning Recipe Tips : காலை, மாலை என எந்த நேரத்திலும் சீக்கிரம் செய்யக்கூடிய 3 சத்தான உணவுகளை எப்படி தயார் செய்வது என்பதை தான் இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம். அவசரமாக வெளியே கிளம்ப நேரிடும்போது, கடைகளில் சாப்பிட விரும்பவில்லை என்றால் இந்த மூன்று உணவுகளையும் வீட்டிலேயே வெறும் 5 நிமிடங்களில் தயார் செய்துவிடலாம். ஆரோக்கியத்துக்கும் நல்லது, நேரமும் உங்களுக்கு மிச்சம்.
பால் ஓட்ஸ் டிஷ்
பசியை போக்கும் வகையில் சீக்கிரம் தயார் செய்யக்கூடிய ரெசிபி பால் ஓட்ஸ் டிஷ். இதனை செய்ய உங்களுக்கு அதிகபட்சமே 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பால் ஒரு கப் இருந்தாலே போதுமானது. அதனுடன் தேவையான அளவு ஓட்ஸை போட்டு மைக்ரோ ஓவன் இருந்தால் 2 நிமிடங்கள் சூடாக்கினால் போதும். உங்களுக்கு பால் ஓட்ஸ் டிஷ் ரெடி. இதனுடன் வீட்டில் தேன் மற்றும் டிரை ப்ரூட்ஸ் இருந்தால் அவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையான மற்றும் சூடான, சத்தான உணவு வெறும் 2 நிமிடங்களில் ரெடி.
மேலும் படிக்க - இளைஞர்களிடையே அதிகமாகும் கேன்சர்: அலர்டா இருங்க மக்களே
வெஜ் சாண்ட்விச்
அடுத்ததாக சீக்கிரம் செய்யக்கூடிய சத்தான ரெசிபி வெஜ் சாண்ட்விஜ். வெஜ் சாண்ட்விச் செய்ய முதலில் வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டை நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர், தயார் செய்து வைத்திருக்கும் மயோனைஸ் மற்றும் நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரிக்காய் மற்றும் கேரட்டை ஒரு பாத்திரத்தில் நன்கு கலக்கவும். இரண்டு துண்டுகள் ரொட்டியை எடுத்து அதற்கு இடையில் இவற்றை வைக்கவும். நான்ஸ்டிக் டவாவில் அப்படியே அதனை வைத்து சில நொடிகள் லேசாக சூடாக்கவும். அவ்வளவுதான் உங்களுக்கான வெஜ் சாண்ட்விஜ் ரெடி.
ரொட்டி முட்டை டோஸ்ட்
காலை நேரத்தில் அவசரமாக வெளியே கிளம்ப நேரிட்டால் ரொட்டி முட்டை டோஸ்ட் ஈஸியாக செய்யலாம். முதலில் நீங்கள் ரொட்டியை டோஸ்ட் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு முட்டையை அதன்மீது முழுமையாக கவர் செய்யும்படி ஊற்றி லைட்டாக சூடாக்க வேண்டும். கூடுதல் சுவைக்காக சீஸ் சேர்க்கலாம். இப்போது ரொட்டி முட்டை டோஸ்ட் ரெடியாக இருக்கிறது. சுவைக்கு உப்பும் சேர்த்துக் கொள்ளலாம். இதை செய்ய உங்களுக்கு வெறும் 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
மேலும் படிக்க - எச்சரிக்கை.... வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ