2022-ல் அமையவுள்ளன அட்டகாசமான 4 யோகங்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் நல்ல யோகம் இருக்கும் போது ஒரு நபரின் வாழ்க்கையில் மங்களகரமான நேரம் வருகிறது. மங்களகரமான யோகத்தால் ஒரு நபரின் தலைவிதியே மாறிவிடுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 31, 2021, 06:41 PM IST
  • 2022 ஆம் ஆண்டில் சில விசேஷ சுப யோகங்கள் உருவாகின்றன.
  • இந்த சுப யோகங்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • 2022 ஆம் ஆண்டின் மத்தியில் சூரியனும் புதனும் சந்திப்பதால் புத ஆதித்ய யோகம் உருவாகும்.
2022-ல் அமையவுள்ளன அட்டகாசமான 4 யோகங்கள்: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்  title=

Horoscope 2022: 2022 ஆம் ஆண்டிற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த புத்தாண்டில் மக்கள் பல வித எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் அடி எடுத்து வைக்கவுள்ளனர். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் நல்ல யோகம் இருக்கும் போது ஒரு நபரின் வாழ்க்கையில் மங்களகரமான நேரம் வருகிறது. மங்களகரமான யோகத்தால் ஒரு நபரின் தலைவிதியே மாறிவிடுகிறது. 

2022 ஆம் ஆண்டில் சில விசேஷ சுப யோகங்கள் உருவாகின்றன. இந்த சுப யோகங்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இது முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறக்கும். 2022ல் எந்தெந்த சுப யோகங்கள் அமையப் போகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

புத ஆதித்ய யோகம்

2022 ஆம் ஆண்டின் மத்தியில் சூரியனும் புதனும் சந்திப்பதால் புத ஆதித்ய யோகம் உருவாகும். இந்த யோகம் ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 25, 2022 வரை இருக்கும். இந்த யோகம் ஜோதிடத்தில் (Astrology) மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் புதன், சூரியனால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச பலன் அடைவார்கள்.

ஷஷ யோகம்

ஷஷ யோகம் ஏப்ரல், 2022 முதல் ஜூலை 12, 2022 வரை இருக்கும். ஜாதகத்தில் சனியின் சிறப்பு நிலை உருவாகும் போது ஷஷ யோகம் உண்டாகும். இந்த யோகம் பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகத்தால், சனி பகவான் (Lord Shani) ஆண்டு முழுவதும் ஏறக்குறைய அனைத்து ராசிக்காரர்களுக்கும் சுபமான பலன்களைத் தருவார். 

ALSO READ | MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது 

ருச்சக் யோகம்

ருச்சக் யோகம் 26 பிப்ரவரி 2022 முதல் 7 ஏப்ரல் 2022 வரை இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் தன் சொந்த ராசியில் உச்சம் பெற்றால் இந்த யோகம் உருவாகிறது. செவ்வாய் கிரகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த யோகத்தினால் அதிக பலன் கிடைக்கும்.

குரு-மங்கள யோகம்

ஜோதிடத்தில் இது மிகவும் பலன் தரும் யோகமாக கருதப்படுகிறது. செவ்வாய் மற்றும் வியாழன் இணைவதால் இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகம் 2022 மே மாதம் மீன ராசியில் உருவாகும். மீன ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) இந்த யோகம் அமைவதால் அதிக பலன்கள் கிடைக்கும். 

இது தவிர, இந்த யோகப் பலன் காரணமாக, வாழ்க்கையில் செழிப்பு, தொழிலில் முன்னேற்றம் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை ஆகும். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | இந்த ராசிக்கார பெண்கள் கணவனை அடக்கி ஆள்வார்கள்: உங்க மனைவிக்கு இந்த ராசியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News