மீண்டும் டெல்லியை மிரட்டியது புழுதி புயல்! எச்சரிகை தரும் IMD!

டெல்லியில் இன்று அதிகாலை சுமார் 3:39 மணிக்கு கடுமையான புழுதி புயல் ஏற்பட்டது.

Last Updated : May 16, 2018, 11:33 AM IST
மீண்டும் டெல்லியை மிரட்டியது புழுதி புயல்! எச்சரிகை தரும் IMD! title=

டெல்லியில் இன்று அதிகாலை சுமார் 3:39 மணிக்கு கடுமையான புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் நகர் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

 

 

கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதி புயல் தாக்கி வரும் நிலையில் தற்போது இன்று அதிகாலை சுமார் 3:39 மணிக்கு மீண்டும் பலத்த காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியுள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் Delhi மற்றும் சுற்றியுள்ள பகுதியான Rohtak, Manesar, Gurgaon, Sonepat and Meerut உள்ளிட்ட பகுதிகளில்ளை புயல்கள் தாக்கும் ஏற்ப்படும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் அதிகாலையில் சாணக்கியபுரி, வடக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. இதில் மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வீசியதாக கூறப்படுகிறது. இந்த புழுதி காற்றால் மரங்கள் சில வேரோடு சாய்ந்தது.

கடந்த இரு தினங்களில் புழுதி புயல் காரணமாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி உட்பட ஐந்து வட இந்திய மாநிலங்களில் 80 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News