திருமண உறவில் மூன்றாவது நபர் தலையிடுவது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது!
வடமாநிலங்களில் சட்டத்திற்கு எதிராக காப் பஞ்சாயத்து என்னும் கட்ட பஞ்சாயத்து முறை வழக்கத்தில் உள்ளது. திருமணம் முடிந்த தம்பதிக்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளை கொண்ட இப்பஞ்சாயத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சக்தி வாஹினி என்ற அரசு சார்பற்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இந்த மனுவினை இன்று விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் தெரிவித்ததாவது., இரு மனமொத்த தம்பதியின் திருமணத்திற்கு எதிரான எந்தவொரு சட்டவிரோத முறையில் கட்டப்பஞ்சாயத்துகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. அரசு சட்டவிதிகளை உருவாக்கும் வரை இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு தண்டனை விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் காப் பஞ்சாயத்து நடத்துவதற்கு விரிவான வழிமுறைகளை வகுக்க உத்தரவு பிறப்பிக்க கோரிய சக்தி வாஹினி அமைப்பின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்!