கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இதனையடுத்து, மைசூரு மாவட்டத்தின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவர்கள் கடந்த ஏப்ரல் 20-ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... வட கர்நார்டாக பகுதியில் இருக்கும் பாதாமி தொகுதி மக்கள் தன்னை அத்தொகுயில் போட்டியிடமாறு கோருவதாகவும், தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அவர் பாதமி தொகுதியிலும் போட்டியிடுவதாகவும், வரும் ஏப்ரல் 24-ஆம் நாள் அதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
Modi Ji also contested election from two seats. He (Siddaramaiah) is contesting election from the two constituencies (Chamundeshwari and Badami) under directions by Party's High Command: Mallikarjun Kharge, Congress #KarnatakaElection2018 pic.twitter.com/BZhMp2EfZN
— ANI (@ANI) April 22, 2018
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவிக்கையில்... பிரதமர் மோடியும் இரண்டு தொகுதியில் நின்று போட்டியுள்ளார். அதேப்போல் சித்தராமையா போட்டியிடுவதில் தப்பேதும் இல்லை என தெரிவித்துள்ளார்!