நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், வருகிற ஏப்ரல் 22-ம் தேதி யூடியூப்பில் நேரலையில் பேச உள்ளார்.
இது குறித்து அவர் தற்போது கூறியிருப்பதாவது...!
நாளைய மாற்றத்திற்கான அறிகுறி என் கண் எதிரே தெரிகிறது. தரமற்ற அரசியல் நடைமுறைகளால் தமிழர்கள் இழந்த பெருமையை மீட்டு அரசியல் தரத்தை உயர்த்த வேண்டும்.
கிராமியத்தை வளர்த்து மக்கள் நலனை முழுமையாக மேம்படுத்துவது எளிதான காரியம் அல்ல இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது.....!
மக்களின் பிரச்னையை அணுகும் விதத்திலும், மக்களோடு தொடர்பில் இருக்கும் விஷயத்திலும் மற்ற தலைவர்களைவிட மாறுபட்டு, புதிய பாணியை கமல் கடைப்பிடிக்கிறார்.
தமிழ் மக்கள் எல்லோர் கைகளிலும் இருப்பது ஆண்ட்ராய்டு மொபைல்தான். அதனால், டெக்னாலஜியைப் பயன்படுத்தி, மக்களோடு எல்லா விஷயங்களிலும் நேரடித் தொடர்பில் இருக்கிறார்.
அந்த வகையில்தான், யூடியூப் மூலம் நாளை காலை 10.30 மணிக்கு லைவில் வர இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் சம்பந்தமாகத்தான் அவர் நாளை மக்களோடு விவாதிக்க இருக்கிறார்.
அதில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் சம்பந்தமாகத்தான் அவர் நாளை மக்களோடு முன்னெடுத்து விவாதிக்க இருக்கிறார்.