மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் நல்அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம் தெரிவித்திருந்தது.
ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டுவதற்காக சுமார் ரூ.50.80 கோடியில் அளவில் டெண்டா் விடப்பட்டன. இதைத்தொடா்ந்து இன்று காலையில் மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது.
நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் இன்று காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து, சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu: CM Edappadi K Palaniswami, Deputy CM O Panneerselvam laid the foundation stone for construction of a memorial for former CM J Jayalalithaa in Chennai. pic.twitter.com/1q8WW1Tvnb
— ANI (@ANI) May 7, 2018
இந்த அடிக்கல் நாட்டும் விழாவில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
Tamil Nadu: CM Edappadi K Palaniswami, Dy CM O Panneerselvam & other leaders at the foundation stone laying ceremony for construction of a memorial for former CM J Jayalalithaa in Chennai. The ceremony to begin shortly. pic.twitter.com/i81S1PBoZX
— ANI (@ANI) May 7, 2018