IPL_2018: 2-வது வெற்றியை பெற்றது டெல்லி அணி!

ஐபிஎல் தொடரின் 26-வது லீக் போட்டியில் நேற்று டெல்லி- கொல்கத்தா அணிகள் நேற்று மோதின. இதில், டெல்லி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது! 

Last Updated : Apr 28, 2018, 08:44 AM IST
IPL_2018: 2-வது வெற்றியை பெற்றது டெல்லி அணி!  title=

டெல்லி: ஐ.பி.எல் தொடரின் 26-வது லீக் போட்டியில் நேற்று டெல்லி- கொல்கத்தா அணிகள் நேற்று மோதின. அதில், டெல்லி அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், பீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணியில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய காம்பீர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிருத்வி ஷா சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக அவரும் காலின் முன்றோவும் களமிறங்கினர். 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து இருந்த முன்றோ 7-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். பிருத்வி ஷா, 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷாப் பன்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸூடன், மேக்ஸ்வெல் இணைந்தார். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடி, கொல்கத்தா பந்துவீச்சை பதம் பார்த்தது. 

பின்னர், 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் அவுட் அனார். இதையடுத்து, ஐயர், 40 பந்துகளில் 93 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி. லின் 5 ரன்னிலும் அடுத்த வந்த உத்தப்பா 1 ரன்னிலும் நிதிஷ் ராணா 8 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதிரடியாக ஆடிய நரேன், 9 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்து திருப்திப்பட்டுக்கொண்டார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் 18 ரன் எடுத்திருந்த போது போல்ட் பந்துவீச்சில் மிஷ்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற தடுமாறத் தொடங்கியது கொல்கத்தா. சுபம் கில்லும் ரஸலும் அணியை மீட்கப் போராடினர். சுபம் கில் 37 ரன்களும் ரஸல் 30 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து அவுட் ஆனார். கொல்கத்தா அணியால் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், அவேஷ் கான், மிஷ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.

7-வது லீக் போட்டியில் ஆடிய டெல்லிக்கு இது இரண்டாவது வெற்றி. கொல்கத்தா அணிக்கு இது 4 வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது..!

Trending News