IPL 2018 தொடரின் 36-வது போட்டியில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது!
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
இத்தொடரின் 36-வது போட்டியில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கினை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிரத்திவி ஷா அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி 65(36) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஸ்ரேயாஸ் ஐயர் 44(36) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணி தரப்பில் ராசிட் கான் 2 விக்கெட்டுகளை குவித்தார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். அலக்ஸ் 45(31) ரன்னிலும், ஷிகர் தவான் 32(30) ரன்னிலும் வெளியேறினர். இவரை அடுத்து மனிஷ்பாண்டே 21(17) ரன்களில் வெளியேற, கேப்டன் வில்லியம்சன் 32(30) மற்றும் யூசப் பதான் 27(12) ரன்களுடன் களத்தில் நின்று ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி இலக்கினை எட்டினர்.
ஆட்டத்தின் 19.5 வது பந்தில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஐதராபாத் அணி 164 ரன்களை குவித்தது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி தனது 7-வது வெற்றியினை பதிவு செய்தது.