ஐபிஎல் 2018: எழிச்சி பெற்ற மும்பை அணி; 5_வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐபிஎல் 11 சீசனில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 5, 2018, 06:08 AM IST
ஐபிஎல் 2018: எழிச்சி பெற்ற மும்பை அணி; 5_வது இடத்திற்கு முன்னேற்றம் title=

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த [போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நடந்தது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 6 சிக்சர், 2 பவுண்டரி அடங்கும். இந்த சீசனில் தொடர்ந்து யுவராஜ் சிங் சொதப்பி வருகிறார். நேற்றைய போட்டியில் 14 ரன்கள் எடுத்த நிலையில், ரன்-அவுட் ஆனார். 

 

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், அதிக ரன்கள் வித்தியாசத்தில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் 175 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி தந்து பேட்டிங்கை தொடங்கியது. 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 6 சிக்சர், 3 பவுண்டரி அடங்கும். மும்பை அணி இந்த சீசனில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 5_வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப் 4_வது இடத்தில் உள்ளது.

 

 

இதுவரை இரு அணிகளும் 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அதில், மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டங்களிலும், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் 10 ஆட்டங்களிலும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இன்று (சனிக்கிழமை) இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டம் நான்கு மணிக்கு புனேவில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி மோதுகின்றன. அதேபோல ஹைதரபாத்தில் 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் மோத உள்ளன.

Trending News