ஐபிஎல் 15_வது லீக்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்

இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியும் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 18, 2018, 07:34 PM IST
ஐபிஎல் 15_வது லீக்: டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பவுலிங்  title=

கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடர் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 15_வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி மற்றும், கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் பெங்களுரு அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. நான்காவது போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. விளையாடிய நான்கு போட்டிகளில் 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த அணி ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணி இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளில், முதல் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டாவது போட்டியில் டிஎல்எஸ் (DLS Method) முறைப்படி டெல்லி அணியை 10 ரன்கள் வித்தியசத்தில் தோற்கடித்தது. மூன்றாவது போட்டியில் பெங்களுரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விளையாடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் தோல்வியும், 2-ல் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த அணி ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.

இரண்டு அணியும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடக்கூடும்.

இதுவரை ராஜஸ்தான் அணியும், கொல்கத்தா அணியும் 15 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ராஜஸ்தான் அணி 9 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இரு அணிகளும் நான்கு போட்டிகளில் மோதி உள்ளன. அதில் ராஜஸ்தான் அணி மூன்று வெற்றியும், கொல்கத்தா அணி ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியும் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ராஜஸ்தான் அணி தனது பேட்டிங்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

 

 

Trending News