IPL 2018 தொடரின் 52-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. டெல்லி அணிதரப்பில், விஜய் ஷர்ங்கர் 36 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்ஷல் பட்டேல் 36 ரன்னுடன் (16 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரர் அம்பத்தி ராயுடு சிறப்பாக விளையாடி 50 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் கை கொடுக்கதாதால், சென்னை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் டெல்லி அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இத்தொடரில் 4-வது வெற்றியை பதிவு செய்தது.