IPL 2018 தொடரின் 11-வது சீசனின்,17_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார்.
முதலில் பேட்டிங்செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய வாட்சன், 51 பந்தில் சதமடித்தார்.
இது, இவரது 3வது ஐ.பி.எல்.சதம். இவர், 57 பந்தில் 106 ரன்கள் (6 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.
ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்ரேயாஸ் கோபால், 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி, 18.3 ஓவரில், 140 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.
இதன் மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
சென்னை அணி சார்பில் தீபக் சகார், ஷர்துல் தாகூர், டுவைன் பிராவோ, கரண் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
4-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு விழுந்த 3-வது அடியாகும்.
சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத் சன்ரைசர்சை (மாலை 4 மணி) சந்திக்கிறது.