ஐபிஎல் 14_வது லீக்: டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்

இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்றது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2018, 07:35 PM IST
ஐபிஎல் 14_வது லீக்: டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் title=

கடந்த 7-ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசனின், இன்று நடைபெறும் 14_வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது. இதனால் ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

அதேபோல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த அணி ஐ.பி.எல் தொடரின் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.

இதுவரை ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மும்பை இந்தியன்ஸ் 13 முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் 4 வெற்றியையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 3 வெற்றியையும் பதிவு செய்துள்ளது. 

இன்று நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களம் இறங்கக்கூடும். எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலி தேர்வு பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

 

 

Trending News