TMC பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்ட்ராக்கு எதிராக ஜீ மீடியா கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு!!
திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) எம்.பி. மஹுவா மொய்த்ரா ஜீ மீடியா கார்ப்பரேஷன் லிமிடெட்-ஐ 'சோர்' (திருடன்) மற்றும் பணம் செலுத்திய செய்தி சேனல் என கூறியதற்காக அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது ZMCL. TMC சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்கை ஜீ நியூஸ் தலைமை ஆசிரியர் சுதீர் சவுத்ரி தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் கடத்த வெள்ளிக்கிழமை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சமர் விஷால், நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. புகார்தாரர் சார்பில் ஆஜரான வக்கீல் விஜய் அகர்வால், நீதிமன்றத்தில் மொய்த்ராவின் வீடியோவை போட்டுக்காட்டினார். அதில், அவர் ஜீ நியூஸை ‘சோர்’ (திருடன்) மற்றும் ‘கட்டண செய்தி’ என்று அதில் கூறியுள்ளார். ஜீ நியூஸின் உரிமையாளரை மொய்த்ரா ஒரு 'திருடன்' என்றும், சேனலுடன் தொடர்புடையவர்கள் ‘படிக்காதவர்கள்’ மற்றும் ‘புட்பக்’ (முட்டாள்) என்றும் அழைக்கப்பட்டதாக அகர்வால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஜூலை 8 ஆம் தேதி TMC சட்டமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, ஜீ நியூஸ் தலைமை ஆசிரியர் சுதீர் சவுத்ரி மீது பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில் திருட்டுத்தனமாக குற்றம் சாட்டியதற்காக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவதூறு குற்றத்திற்காக புகார் அளித்துள்து குறிப்பிடத்தக்கது.