வேளாண் துறையின் மீது இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளார்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைப்பெற்ற இரண்டு நாள் வேளாண் கருத்தரங்கின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது விவசாயத்தை நிலையானதாகவும், லாபம் தரக் கூடிய வகையிலும் மாற்ற வேண்டுவதற்கான செயல்களை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
வேளாண்துறை நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விஷயம். உணவு பாதுகாப்பின்றி நாட்டின் பாதுகாப்பு இல்லை என தெரிவித்தார், மேலும் தற்போது இளைஞர்கள் பலரும் விவசாயத்தின் மீது தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர். இது வரவேற்க கூடிய விஷயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது, உணவு தானியங்களில் நாம் தன்னிறைவு கொள்ள வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த, லாபகரமானதாக மாற்ற வேண்டிய கடமை அரசிற்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏராளமான மக்களின் கவனத்தை வேளாண் துறையின் பக்கம் ஈர்க்க நடவடிக்கைகள் எடக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து விவசாயத்தை கையில் எடுக்கச் செய்ய வேண்டும் என்ற என்னத்தில் அரசு செயல்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விஞ்ஞானிகள், நிபுணர்கள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.