உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில், ஆண் போன்று அலங்காரம் செய்து கொண்டு பேஸ்புக் மூலம் CFL பல்ப் நிறுவன உரிமையாளரின் மகன் ஸ்வீட்டி சென் என்ற பெயரை கிருஷ்ணா சென் என கூறி ஏமாற்றி ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
அந்த பெண் வீட்டாரிடம் தொழில் தொடங்க 8 லட்சம் ரூபாய் வரதட்சணையும் பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முகநூலில் தான் சந்தித்த ஹல்வானி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணை, தான் ஒரு ஆண் என அவரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு ஸ்வீட்டி சென் கொடுமைபடுத்தியுள்ளார்.
இதையடுத்து, 2016-ம் ஆண்டு கலதுங்கி பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடன் ஹரித்துவாருக்கு சென்றுவிட்டார் ஸ்வீட்டி.
இந்நிலையில், முதல் மனைவி, தன் கணவர் ஹரித்துவாரில் உள்ள தன்னுடைய தொழிற்சாலைக்காக வேண்டும் என கேட்டு வரதட்சணை பெற்றதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஸ்வீட்டி புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் தான் ஒரு பெண் என்பதை ஸ்வீட்டி ஒப்புக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனையிலும் ஸ்வீட்டி ஒரு பெண் என்பது உறுதியானது.