பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா எதிராக புகார்

Last Updated : Jun 23, 2016, 12:10 PM IST
பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா எதிராக புகார் title=

புதுடெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்டார் என்று பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். 

ஆம் ஆத்மி கட்சியின் சங்கம் விகார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தினேஷ் மொகானியா. மொகானியாவின் அலுவலகத்திற்கு சென்று பெண்கள் சிலர் தண்ணீர் பிரச்சனையை கூறி உள்ளனர். ஆனால் மொகானியா அவர்களை வெளியே தள்ளியதாகவும், அவர்களிடம் தவறாக நடந்துக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளரிடம் பேசுகையில்:- தண்ணீர் பிரச்சனைக்காக நான் அவரை தினம் சந்தித்துவரும் நிலையில் மொகானியா அலுவலகத்திற்கு சென்றோம் அவர் என்னை அடையாளம் காண மறுத்துவிட்டார், மேலும் தினேஷ் மொகானியா என்னை மற்ற பெண்களுடன் வெளியே தள்ளினார். அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

எங்களிடம் தவறாக நடந்துக் கொண்ட போது தள்ளினார், நாங்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். பிறரிடம் அடிவாங்குவதற்காகவா நாங்கள் இங்கே நிற்கிறோம்? என்று கேள்வி எழுப்பிஉள்ளார் மொகானியாவை டெல்லி குடிநீர் வழங்கல் வாரிய தலைவராக நியமித்தது முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். ஏற்கனவே டெல்லியில் வாட்டர் டேங்கர் வாங்குவதில் ரூ. 400 கோடி அளவில் ஊழல் ஏற்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது, இதற்கு எதிராக ஊழல் தடுப்புபடை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Trending News