ஒடிசா மாநிலம் ஜானுகுடா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் கோரபுட் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்துள்ளார். அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் மருத்துவ நிர்வாகம் பிரசவத்திற்கு அனுமதி மறுத்துள்ளது.
மருத்துவமனைக்குள் அனுமதிக்காததால் அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இறங்கி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன் பின்னர் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது,தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த பெண் புகார் கொடுத்துள்ளார், அதன் அடிப்டையில் தற்போது மருத்துவ நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Odisha: Woman gave birth in drain near hospital's canteen in Koraput after doctors allegedly refused to check her due to lack of documents, now admitted. She was visiting her ailing husband there when she complained of labor pain. Hospital's superintendent refutes allegations pic.twitter.com/0dNZeJDQTv
— ANI (@ANI) December 16, 2017