Prajwal Revanna Sex Scandal: கர்நாடகாவில் அனல் பறக்கும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே சூடான அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் புகார் காரணமாக பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருந்தது. முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சரும், ஜே.டி(எஸ்) தலைவருமான எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆபாச வீடியோ விவகாரம் - சிறப்பு புலனாய்வுக் குழு
ஆபாச வீடியோ சம்பந்தமாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்பு புலனாய்வுக் குழுவை (Special Investigation Team) கர்நாடகா அரசு அமைத்தது. ஆனால் அடுத்த நொடியே பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றதாக செய்திகள் வந்தது.
யார் இந்த பிரஜ்வல் ரேவண்ணா?
கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் எச்.டி. ரேவண்ணாவின் மகனாவார்.
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகவுடாவுக்கு ரேவண்ணா மற்றும் குமாரசாமி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரேவண்ணா. இவர் எம்எல்ஏவாக இருக்கிறார். இவரின் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) சார்பில் கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் போட்டியிட்டார்.
பாலியல் புகாரில் சிக்கிய 6 கர்நாடக அமைச்சர்கள்
ஆபாச வீடியோ விவகாரத்தில் கர்நாடக தலைவர் ஒருவரின் பெயர் இணைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே பல தலைவர்கள் இதே காரணத்தால் ராஜினாமா செய்ய நேரிட்டது. முன்னதாக பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் பற்றி பார்ப்போம்
மேலும் படிக்க - ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்தி
பாஜக அமைச்சர் ஜார்கிஹோலியின் செக்ஸ் வீடியோ
2021 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சி இருந்தது மற்றும் பி.எஸ்.எடியூரப்பா மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அந்த நேரத்தில், பி.எஸ்.எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோலியின் பாலியல் வீடியோ வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெண்ணுடன் உல்லாசம் வீடியோ வைரல்
கர்நாடக அரசின் கலால் துறை அமைச்சராக இருந்த எச்.ஒய்.மெட்டியின் ஆபாச வீடியோவும் 2016 ஆம் ஆண்டு வைரலானது. ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து எச்.ஒய். மெட்டி ராஜினாமா செய்தார்.
நிர்வாண படங்களை பார்த்த அமைச்சர் தன்வீர் சைட்
2016 ஆம் ஆண்டில், திப்பு சுல்தானின் பிறந்தநாளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கர்நாடக அரசின் அமைச்சரான தன்வீர் சைட் பங்கேற்றார். அப்பொழுது பெண்களின் அரை நிர்வாண படங்களை பார்த்துக் கொண்டு இருப்பதை போல வீடியோ வெளியானது. இந்த விஷயம் டிவி சேனலில் காட்டுத்தீ போல் பரவியது. இதன் காரணமாக தன்வீர் சைட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும் படிக்க - 'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்
சட்டசபையில் ஆபாச படத்தை பார்த்த 3 பாஜக அமைச்சர்கள்
கடந்த 2012 ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் அமர்ந்து ஆபாச வீடியோக்களை பார்த்த பாஜக அமைச்சர்கள் 3 பேர் சிக்கினர். அப்போதைய அரசில் அமைச்சர்களாக இருந்த லக்ஷ்மண் சவடி, ஜே.கிருஷ்ணா பால்மர், சி.சி.பாட்டீல் ஆகியோர் சட்டசபை கூட்டத்தொடரின் போது மொபைலில் ஆபாச வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த விவகாரம் வைரலானதை அடுத்து மூவரும் ராஜினாமா செய்தனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவும் பதவி விலகுவாரா?
கர்நாடகாவின் ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ வாக்குப்பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. வீடியோ வைரலான இரண்டு நாட்களுக்குப் பிறகு ஹசன் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு புறப்பட்டார்.
ஆனால், பிரஜ்வல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என ஜேடிஎஸ் கூறியுள்ளது. இந்த வீடியோ போலியானது என்று அக்கட்சி கூறி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்வாரா? இல்லையா? என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ