பாஜக தலைவர்களுக்கு என்ன பிரச்சனை? அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட்

உடல்நலக்குறைவு காரணமாக பாஜகவின் மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற்று வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2019, 07:34 PM IST
பாஜக தலைவர்களுக்கு என்ன பிரச்சனை? அடுத்தடுத்து மருத்துவமனையில் அட்மிட் title=

டெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக பாஜகவின் மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி ஆகி சிகிச்சை பெற்று வருவது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அவர்களின் ஆட்சி முடிய இன்னும் நான்கு மாதங்களே உள்ளது. அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. 

ஒருபுறத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் வியூகம் அமைத்து வருகிறது.

இந்த நிலையில், பாஜகவின் சில மூத்த தலைவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பாஜகவுக்கு பின்னடைவாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜக தரப்பில், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும், அதற்க்கான சிகிச்சை பெறுவது என்பது நடைமுறையானது. அதற்காக பாஜகவுக்கு பின்னடைவு எனக் கூறுவது ஏற்புடையது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு ஏற்ப்பட்ட காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் அமைச்சராக ரவிசங்கர் பிரசாத்துக்கு, கடந்த திங்கள்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லிக்கு, கடந்த வருடம் (2018) அவருக்கு சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்தே அவருக்கு உடலில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று இருக்கிறார்.

முன்னதாக கோவா மாநிலத்தின் முதலமைச்சரான மனோகர் பாரிக்கரருக்கு ஏற்ப்பட்ட பாதிப்பால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், தற்போது பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

Trending News