CJI: ஆண் பெண் என முடிவு செய்வது எது? உச்ச நீதிமன்ற விசாரணையில் தலைமை நீதிபதி

CJI Chandrachud On Same-Sex Marriage: தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களின் முதல் நாள் விசாரணையில்  'நடவடிக்கைகளை ஆதிக்கம் செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டோம்' என தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 18, 2023, 03:43 PM IST
  • தன்பாலின திருமணம் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையின் முக்கிய வாதங்கள்
  • யார் முதலில் பேச வேண்டும் என்பதை நான் முடிவு செய்வேன்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
  • ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்கும்போது எதன் அடிப்படையில் குறிப்பிடுகிறோம்?
CJI: ஆண் பெண் என முடிவு செய்வது எது? உச்ச நீதிமன்ற விசாரணையில் தலைமை நீதிபதி title=

நாட்டில் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று (2023 ஏப்ரல் 18, செவ்வாய்கிழமை) விசாரிக்கத் தொடங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி எஸ். கே கவுல், நீதிபதி எஸ். ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த மனுக்களின் மீதான விசாரணையைத் தொடங்கியது.

விசாரணை தொடங்கியதுமே, கடுமையான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி கவுல் மற்றும் மத்திய அரசு இடையே கடுமையான வாதங்களுடன் மனுக்கள் மீதான விசாரணைத் தொடங்கியது.

அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது பூர்வாங்க வாதங்களில், மனுதாரர்களின் ஆரம்ப வாதங்களை கேட்க வேண்டாம் என்று நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார், அதற்கு தலைமை நீதிபதி "முதலில் வழக்கின் உண்மைகளை கேட்போம்" என்று அவரை இடைமறித்துவிட்டார்.

"எங்கள் பூர்வாங்க சமர்ப்பிப்புகளுக்கு மனுதாரர்கள் பதிலளிக்கட்டும் என்று எஸ்.ஜி. மேத்தா சொன்னதைக் கேட்டஉயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த விஷயத்தில் நான் தான் முடிவெடுப்பேன்... மனுதாரர்களிடம் இருந்து தொடங்குவோம். இந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று யாரும் சொல்ல முடியாது” என்று கடுமையாக தெரிவித்தார்..

ஓரினச்சேர்க்கை திருமணம் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையின் முதல் நாள் முக்கிய வாதங்கள்
தலைமை நீதிபதி சந்திரசூட்: ஒரு ஆணின் முழுமையான கருத்து அல்லது ஒரு பெண்ணின் முழுமையான கருத்து என்று எதுவும் இல்லை.

உங்கள் பிறப்புறுப்பு என்ன என்பது முக்கியமல்ல. அதுதான் புள்ளி: இது மிகவும் சிக்கலானது. சிறப்புத் திருமணச் சட்டம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்கும் போது கூட, அதை பிறப்புறுப்புகளின் அடிப்படையில் குறிப்பிடுவதில்லை என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் எஸ்.ஜி. மேத்தா, சிறப்பு திருமணச் சட்டம் முழுவதுமே, ஒரு உயிரியல் ஆணுக்கும் உயிரியல் பெண்ணுக்கும் இடையிலான உறவின் அடிப்படையில் சட்டமியற்றுகிறது என்று தெரிவித்தார். மேலும்,  இந்துக்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்படுவார்கள், அதனால்தான் மாநிலங்களிடம் இந்த விவகாரத்தில் கருத்து கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க | பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அப்போது இடைமறித்த நீதிபதி கவுல், நாங்கள் தனிப்பட்ட சட்டங்களுக்குள் செல்லவில்லை, நீங்கள் எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்களோ அப்படி முடிவெடுப்போம் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? அனைத்தையும் கேட்க வேண்டிய கட்டாயம் இல்லை என தெரிவித்தார்..

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தில் சட்டப்பூர்வ குறைபாடு எதுவும் இல்லை என்றும், சமூக-சட்ட அனுமதி வழங்குவது பற்றிய கேள்வி இல்லை என்றும் எஸ்.ஜி.மேத்தா தெரிவித்தார்.

இப்படி முதல் நாள் விசாரணையே சூடுபிடித்துவிட்டது என்பதால், இந்த விவகாரத்தை நோக்கி அனைத்துத் தரப்பினரின் கவனமும் குவிந்திருக்கிறது.

முன்னதாக, மார்ச் 13 அன்று தன்பாலின திருமணம் தொடர்பான மனுக்களை விசாரிக்க ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த பிரச்சினை "அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது" என்பதால் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. 

இந்த விவகாரத்தில் நாட்டின் பல்வேறு தரப்பினருக்கும் ஆழமான வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதால், இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு நாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | தன்பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது பெரும் பாதிப்பை உண்டாக்கும்: NCPCR

இதில் மனு தாக்கல் செய்தவர்கள், தன் பாலினத் தம்பதிகள், LGBTQ+ ஆர்வலர்கள் என பல தரப்பினரும் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். மதத் தலைவர்கள் மட்டுமல்ல, மத்திய அரசும் ஒரே பாலின சேர்க்கையை கடுமையாக எதிர்ப்பதால், வாத-பிரதிவாதம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது தெரிகிறது. 

இந்த வழக்கில் வெளியாகும் தீர்ப்பு, நாட்டில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், சர்வதேச அளவில் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது.

லட்சக்கணக்கான LGBTQ+ மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் இந்த விஷயத்தில் ஒரு முடிவு எட்டப்படுவது அத்தியாவசியமானது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னதாக (2012 இல்), இந்திய அரசு தன்பாலின உறவு கொள்பவர்களின் எண்ணிக்கையை 25 லட்சம் என்று கணக்கிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில், தன்பாலினத்தினருக்கு சாதகமான முடிவு எட்டப்பட்டால், உலகில் தன்பாலினத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் நாடுகளின் 35 வது நாடாக இந்தியா உருவெடுக்கும். அதன்பிறகு, தத்தெடுப்பு, விவாகரத்து மற்றும் வாரிசுரிமை உட்பட பல முக்கியமான சட்டங்களும் மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | தன்பாலின திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை: மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News