கர்நாடகா: முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 முக்கிய சவால்கள்!

New Chief Minister Siddaramaiah: முதல்வருக்கான போரில் வெற்றி பெற்ற சித்தராமையாவுக்கு முன் பல சவால்கள் உள்ளன. அதனி எப்படி சமாளிக்க போகிறார்? அவரின் முன் இருக்கும் சவால்கள் என்ன? குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 18, 2023, 06:23 PM IST
  • முதல்வர் யார் என்ற போட்டியில் டி.கே. சிவகுமாரை எதிர்த்து சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார்.
  • எதிர்கட்சியான பாஜகவை விட சித்தராமையாவுக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது டி.கே. சிவக்குமார் கோஷ்டி.
  • முதல்வர் சித்தராமையாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் அமைச்சர் பதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
கர்நாடகா: முதல்வர் சித்தராமையாவுக்கு முன் இருக்கும் 5 முக்கிய சவால்கள்! title=

Challenges Of Siddaramaiah: முதல்வர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டியில் டி. கே. சிவகுமாரை எதிர்த்து சித்தராமையா வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அடுத்த 5 ஆண்டுகள் சித்தராமையா முதல்வராக நீடிப்பாரா என்பது தான் இங்கு பெரிய கேள்வியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆரம்பத்தில் இருந்தே டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே பனிப்போர் நடந்து வருகிறது. முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட டி.கே. சிவக்குமார் துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது. இந்தப்பதவியில் அவர் திருப்தி அடைந்துள்ளாரா? டி.கே. சிவகுமாரிடம் இருந்து சித்தராமையாவுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா? இருவரும் இணைந்து எந்தவித கருத்து மோதல் இல்லாமல் ஆட்சியை நடத்துவார்களா? போன்ற கேள்வி எழுப்பப்படுகிறது. புதிய முதல்வராக பதவியேற்கும் சித்தராமையாவின் முன் உள்ள சவால்கள் என்ன? இதைப் பற்றிய விரிவாக பார்ப்போம்.

நெருக்கடி ஏற்படுமா? சித்து அணி vs டி.கே.எஸ் அணி:
கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் சித்தராமையா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் டி.கே. சிவக்குமார் மற்றும் அவரது குழு. எதிர்கட்சியான பாஜகவை விட சித்தராமையாவுக்கு பெரிய சவாலாக இருக்கப்போவது டி.கே. சிவக்குமார் கோஷ்டி தான். அமைச்சரவையை அமைப்பது முதல் ஆட்சியை நடத்துவது வரை ஒவ்வொரு முடிவை எடுப்பதில் டிகேஷ் மற்றும் கட்சியில் இருக்கும் மற்ற கோஷ்டியை சார்ந்தே சித்தராமையா முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாங்கெல்லாம் ஒரே காங்கிரஸ் அணி, ஒன்றாக தான் இருக்கிறோம் என்று மேலோட்டமாகச் சொன்னாலும், சித்து அணி, டி.கே.கே அணி என கட்சிக்குள் செயல்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகள் இரண்டு அணிகளும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், ராஜஸ்தான் காங்கிரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கர்நாடகாவிலும் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு நன்றாகவே தெரியும். இதனால் தான் கர்நாடகா மாநிலத்திற்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய நான்கு நாட்கள் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம், அனைத்து விசியங்களியும் ஆராய்ந்து எடை போட்டு முடிவெடுத்துள்ளது.

மேலும் படிக்க - Karnataka: மே 20-ம் தேதி பதவியேற்பு விழா! முதலமைச்சர் சித்தராமையா.. துணை முதல்வர் டிகே சிவக்குமார்

அமைச்சரவை சவாலை எதிர்கொள்ளும் சித்தராமையா:
முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பே, அமைச்சரவை அமைக்கும் சவாலை சித்தராமையா எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில், கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பல முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளனர். பல எம்.எல்.ஏ-க்கள் கடந்த காலங்களில் அமைச்சர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டிய சூழல். அதேநேரத்தில் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவிக்கு அடுத்தபடியாக முக்கியமான பதவியான துணை முதல்வர் பதவி கிடைத்துள்ளது. சித்தராமையா மற்றும் டி. கே.சிவக்குமார் கோஷ்டிக்கு உரிய முறையில் அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும். இதனுடன், அமைச்சரவை அமைக்கும் போது, ​​மாகாண வாரியாகவும், மாவட்ட வாரியாகவும், சாதிரீதியாகவும் அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட வேண்டும். இந்த கட்டத்தில் நிறைய லாபிகள் நடக்கும். இந்த அழுத்தங்கள் அனைத்தையும் உரிய முறையில் சமாளித்து, கருத்து வேறுபாடு ஏற்படாத வகையில் அமைச்சர் பதவிகளை பகிர்ந்தளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு முதல்வர் சித்தராமையாவுக்கு உள்ளது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: 
எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைத்தவுடன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே பலமுறை கூறியிருக்கிறார். அப்படிப் பார்க்கும்போது, காங்கிரஸ் அளித்த ​​உத்தரவாதங்களை அமல்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. காங்கிரஸ் கட்சி அறிவித்த இலவச மின்சாரம் உள்ளிட்ட பல உத்தரவாதங்களை நிறைவேற்ற ஆண்டுதோறும் 62 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 40 ஆயிரம் கோடி ரூபாய் போதும் என்கிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கூறுவதை போல 40 ஆயிரம் கோடி ரூபாய் போதும் என்றாலும், அது அரசின் கருவூலத்திற்கு பெரும் சுமையாக இருக்கும். எனவே, அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து உத்தரவாதங்களும் ஒன்றாக நிறைவேற்றப்படுமா? அல்லது பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சில உத்தரவாதங்கள் மட்டும் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்த சித்தராமையா, இந்த சவாலை எப்படி சமாளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!

வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமானது:
தேர்தலில் வாக்காளர்களின் மனதைக் கவர முடிந்தால்தான் எந்த ஒரு அரசியல் தலைவரின் திறமையையும் வெளிக்காட்டி, பதவியைப் பெற முடியும். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால், சித்தராமையாவின் முதல்வர் பதவி இன்னும் உறுதியாகும். ஏற்கனவே, மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில், 25ல் பா.ஜ.,வுக்கு எம்.பி.,க்கள் உள்ள நிலையில், 1 தொகுதியில் மட்டும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை, வரும் லோக்சபா தேர்தலில் பெரிய அளவில் அதிகரிக்கும் பட்சத்தில் சித்தராமையாவின் முதல்வர் என்ற இமேஜை மேலும் உயர்த்தும். லோக்சபா தேர்தலில் சித்தராமையாவால் தனது அஹிந்த் வாக்கு பலத்தை காங்கிரஸுக்கு சாதகமாக மாற்ற முடியுமா என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வி.

ஊழலற்ற நிர்வாகம் என்ற மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது:
ஊழலையும், விலைவாசி உயர்வையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று வாக்காளர்கள் தேர்தலில் தெளிவான செய்தியை அளித்துள்ளனர். எனவே, சுமுகமான, எளிமையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவது சித்தராமையாவின் மிகப்பெரிய பொறுப்பு. மாநிலத்தின் மூத்த அமைச்சர்களில் முதலிடத்தில் இருக்கும் சித்தராமையா சரியாக கையாள்வார் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க - Disproportionate Assets Case: டி.கே.சிவகுமாருக்கு எதிரான மனு.. விசாரணையை ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்

சித்தராமையாவுக்கு முன் இருக்கும் பெரிய சவால்: டெல்லி தலைமை vs கன்னட மக்கள் 
கர்நாடக மாநிலத்தின் தலித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார். அஹிந்தா தலைவர் சித்தராமையா தற்போது மாநில முதல்வராக உள்ளார். இந்தநிலையில் சித்தராமையாவை விட மல்லிகார்ஜுன கார்கேவுக்கு துணை முதல்வர் கே.சிவக்குமார் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால், புதிய முதல்வர் சித்தராமையா, கார்கே மற்றும் உயரதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணு வேண்டிய சூழல் இருக்கிறது. அதேநேரத்தில் டில்லி தலைமையின் விருப்பப்படி ஆட்சி நடத்தவில்லை, கன்னடா மாநில மக்களுக்கான ஆட்சியை நடத்துகிறேன் என்ற கோணத்தில் நுணுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கு சித்தராமையா வளைந்து செல்கிறார் என்ற செய்தியை மக்கள் மத்தியில் பரவினால், கன்னட அடையாளம், கன்னடர்களின் தலைமை பற்றிய கேள்வி எழும். பாஜகவைப் போலவே காங்கிரஸ் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களிடம் சரணடைகிறார்கள் எனப் பேசப்படும். இது சித்தராமையா தலைமைக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே டெல்லி மேலிடம் மற்றும் மாநில மக்கள் என இரண்டு பக்கமும் ஆட்சியை நடத்ட வேண்டிய சவால் சித்தராமையாவுக்கு உள்ளது.

மேலும் படிக்க - Karnataka Election Results 2023: எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி பெற்றது - முழு பட்டியல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News