Budget 2023-24: அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் வாங்குபவர்களுக்கு 3% DA உயர்வு

West Bengal Budget 2023 2024 Highlights: தேயிலை தோட்டங்கள் மீதான விவசாய வருமான வரியை ரத்து செய்த பட்ஜெட் 2023-24! இது மேற்கு வங்க மாநிலத்தின் உத்தேச வரவு செலவு கணக்கு தாக்கல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2023, 05:24 PM IST
  • மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல சேதி
  • தேயிலை தோட்டங்கள் மீதான விவசாய வருமான வரி ரத்து
  • 3,000 கோடி செலவில் 12,500 கிமீ கிராமப்புற சாலைகள் அமைக்கப்படும்
Budget 2023-24: அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் வாங்குபவர்களுக்கு 3% DA உயர்வு title=

கல்கத்தா: 2023-24 நிதியாண்டுக்கான மேற்கு வங்க மாநில பட்ஜெட்டை, மேற்கு வங்க மாநிலத்தின் நிதியமைச்சர் (சுயேச்சைப் பொறுப்பு) சந்திரிமா பட்டாச்சார்யா மாநில சட்டசபையில் தாக்கல் செய்தார். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு 2023-24 ஆம் ஆண்டுக்கான 3.39 லட்சம் கோடி வங்காள பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், பல பெரிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

இந்த முறை பட்ஜெட் உரையில் ஸ்டார்ட் அப்கள், உற்பத்தித் தொழில் மற்றும் கிராமப்புற இணைப்புகளை ஆதரிக்கும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன.

சந்திரிமா பட்டாச்சார்யா பட்ஜெட்

இருப்பினும், மேற்கு வங்க பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய அம்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான டிஏவை 3 சதவீதமாக உயர்த்துவது மற்றும் மேற்கு வங்க அரசு முத்திரைக் கட்டணத் தள்ளுபடியை செப்டம்பர் 30, 2023 வரை நீட்டித்தது என்று சொல்லலாம்.

மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு மம்தா பானர்ஜி அரசு கூடுதலாக 3 சதவீத டிஏ வழங்கப்படும் என்று மாநில நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா அறிவித்துள்ளார். 3 சதவீத டிஏ மார்ச் முதல் அமல்படுத்தப்படும்.

மேற்கு வங்க அரசு முத்திரைத் தீர்வைத் தள்ளுபடி தொடர்பாக அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி, மார்ச் 2023 வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தள்ளுபடி இப்போது 30 செப்டம்பர் 2023 வரை நீட்டிக்கப்படும்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், இனி விமானத்தில் இலவசமாகப் பயணிக்கலாம் 

மேற்கு வங்க பட்ஜெட்

சந்திரிமா பட்டாச்சார்யா, இளம் தொழில்முனைவோருக்கு தலா ரூ.5 லட்சம் வரை நீட்டிக்க ரூ.350 கோடி தொடக்க நிதியை அறிவித்தார். வங்காளத்தின் SGDP 2022-23 நிதியாண்டில் 8.4 சதவீதமாகவும், தொழில்துறை 7.8 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் மேற்கு வங்க பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.  

விவசாய வருமான வரி 

2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான தேயிலை தோட்டங்கள் மீதான விவசாய வருமான வரி தள்ளுபடி செய்யப்படும் என்று FM மேலும் கூறினார். லாஸ்ட் மைல் இணைப்பை அதிகரிக்க, எஃப்எம் பட்டாச்சார்யா, ரூ. 3,000 கோடி செலவில் 12,500 கிமீ கிராமப்புற சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

ரூ 350-கோடி தொடக்க நிதி

இளம் தொழில்முனைவோருக்கு ரூ.350-கோடி தொடக்க நிதி ரூ.5 லட்சம் வரை நீட்டிக்கப்படும் என்று மேற்கு வங்க மாநில நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறினார்.
சாலை அமைக்க ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | விவசாயிகளுக்கான நிதி பலன் அதிகரிப்பு? - மத்திய அரசு கொடுத்த பதில்! 

12,500 கிமீ கிராமப்புற சாலைகள் 

3,000 கோடி செலவில் 12,500 கிமீ கிராமப்புற சாலைகள் அமைக்கப்படும். 'ரஸ்தா ஸ்ரீ' திட்டத்தில் சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட் அறிவிப்பில் சந்திரிமா பட்டாச்சார்யா குறிப்பிட்டார்.

தேயிலை தோட்டங்கள் மீதான விவசாய வருமான வரி ரத்து

2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான தேயிலை தோட்டங்கள் மீதான விவசாய வருமான வரி தள்ளுபடி செய்யப்படும் என்று சந்திரிமா பட்டாச்சார்யா கூறினார். லட்சுமி பந்தர் திட்டத்தில் 1.88 கோடி பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்

முதியோர் உதவித்தொகை

60 வயதைத் தாண்டிய பிறகு மூத்த குடிமக்களுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க | Meghalaya Assembly Election 2023: பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News