பாஜக மூத்த தலைவர் LK அத்வானி அவர்களை இன்று பாரளுமன்றத்தில் சந்தித்த மம்தா பானர்ஜி, அத்வானி அவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றார்!
மூன்று யாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, இன்று பாரளுமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் LK அத்வானி அவர்களை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடம் நடைப்பெற்ற சந்திப்பானது மரியாதை நிமித்தமான சந்திப்பு என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
#WATCH: West Bengal Chief Minister Mamata Banerjee meets senior BJP leader Lal Krishna Advani in Parliament. #Delhi pic.twitter.com/5YbkKDUXj3
— ANI (@ANI) August 1, 2018
மேற்கு வங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினருக்கு இடையே நடைப்பெற்று வரும் பிரச்சனைகள் குறித்து இந்த சந்திப்பில் மம்தா தெரிவித்து இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் பொதுத்தேர்தலில் ஆளும் பாஜக-விற்கு எதிராக மூன்றாவது கூட்டணியினை அமைப்பது தொடர்பாக நாடுமுழுவதும் தலைவர்கள் பலரையும் மம்தா பானர்ஜி சந்தித்து வருகின்றார். பாஜவிற்கு எதிராக நிற்கும் அனைவரையும் ஒன்று திரட்டி வரும் மம்தா,. சமீப காலமாக பாஜக தலைவர்களால் ஒதுக்கப்பட்டு வரும் மூத்த தலைவர் அத்வானி அவர்களை சந்தித்துள்ளார்.
இப்பயணத்தில் நேற்று NCP தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்பிரியா சுலே, பிஜேபியின் யோகேஷ் சின்ஹா மற்றும் ஷத்ருகான் சின்ஹா ஆகியோர்களை சந்தித்தார். பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களையும் சந்தித்தார்.
இந்நிலையில் இன்று இவர் பாஜக மூத்த தலைவர் LK அத்வானி அவர்களை சந்தித்திருக்கும் நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.