புது டெல்லி: மத்தியில் உள்ள மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றிக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டின் தேசிய தலைநகரம் டெல்லியில் வடகிழக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் CAA-வுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை போராட்டத்தில் இஸ்லாமியர்கள் குடியிருக்கும் பகுதிகளில் அதிக அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் துப்பாக்கி சூடு, கல்வீச்சு வீடு, வாகனம் என பல பகுதிகளில் தீ வைக்கப்பட்டது. பல கடைகள் சூறையாடப்பட்டன. செய்து சேகரிக்கச்சென்ற செய்தியாளர்களும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
டெல்லி வன்முறை குறித்த வழக்கு மீண்டும் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், தலைநகரில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளார் என்பதை அதிகாரிகள் காட்ட வேண்டிய நேரம் இது என்று கூறினார். மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை நீதிமன்றம் அறிய முயன்றபோது, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பலர் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாகவும் மாண்டர் கூறினார்.
மேலும் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 20 முதல் 35 வரை உயரலாம் என்று மாண்டர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள் என்ற செயல்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
"உங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க உங்கள் உயர்ந்த செயல்பாட்டாளரை உருவாக்குங்கள்" என்று நீதிபதிகள் கூறினார்கள். யார் பெயரையும் குறிப்பிடாமல் "மிக உயர்ந்த செயல்பாட்டாளர்" என்று கூறினார்.
மக்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு உறுதியளிக்கும் நேரம் இது. இது விரைவில் செய்யப்பட வேண்டும். மக்கள் வசிக்கும் எந்த இடத்திலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி முர்லிதர் கூறினார்.
டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வரும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அவர்களை சந்திக்க வேண்டும். இது அதற்கான நேரம் என்றும் தெரிவித்தார்.
1984 ஆம் ஆண்டில் நடந்ததை போல, இந்த நாட்டில் மற்றொரு சம்பவத்தை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது. ஒரு ஐபி அதிகாரி தாக்கப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். இந்த விஷயங்களை உடனடியாக ஆராய வேண்டும் என்றார்.
மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரண்டு பேர் கொண்ட பெஞ்ச் அதிகாலை 12.30 மணிக்கு நீதிபதி முரளிதரின் இல்லத்தில் அவசர விசாரணையை நடத்தியது. அதாவது காயமடைந்தவர்களுக்கு போதுமான வசதிகளுடன் கூடிய மருத்துவ நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற அவசர மனுவை நீதிமன்றம் விசாரித்தது.
இதற்கிடையில், வடகிழக்கு டெல்லியில் வன்முறை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக குரு தேக் பகதூர் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.