பெங்களூரு: நமது ஒரு வாக்கை செலுத்துவது மிகவும் அவசியம். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் தேர்தலின் போது, இந்த கருத்து மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வாக்காளர்கள் த்வறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கர்நாடகாவில் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி பெங்களூருவில் ஜனநாயக திருவிழா என கூறப்படும் மக்கள் பிராதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்று வாக்களித்தார். நாராயணமூர்த்தி வாக்களித்த பின் பல விஷயங்களை கூறியுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் தனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மேற்கோள் காட்டி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்களிக்காவிட்டால் விமர்சிக்க உரிமை இல்லை
நாராயணமூர்த்தி தனது சட்டமன்ற தொகுதிக்கு வாக்களிக்க வெளிநாட்டில் இருந்து இன்று காலை பெங்களூரு வந்தார். அதே நேரத்தில் அவரது மனைவி சுதா மூர்த்தியும் வாக்களித்துள்ளார். வயதானவர்களான எங்களால் வாக்களிக்க முடியும் என்றால் உங்களைப் போன்ற இளைஞர்களால் ஏன் வாக்களிக்க முடியாது என்று சுதா மூர்த்தி கூறினார். வாக்களிக்கும் போது, நாராயணமூர்த்தி பேசுகையில், 'முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகு நல்லது எது கெட்டது என்று சொல்ல வேண்டும். வாக்களிக்கவில்லை என்றால் விமர்சிக்க எங்களுக்கு உரிமை இல்லை.
என் பெற்றோரும் அதைத்தான் செய்தார்கள்: நாராயண மூர்த்தி
இளைஞர்களை வாக்களிக்குமாறு வலியுறுத்திய நாராயண மூர்த்தி, "வீட்டில் உள்ள பெரியவர்கள் இளைய உறுப்பினர்களுடன் அமர்ந்து வாக்களிப்பது ஏன் முக்கியம் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்" என்றார். என் பெற்றோரும் அவ்வாறே செய்தார்கள். வாக்குப்பதிவு நாளில், வாக்களிக்காமல் எங்கும் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்துகொண்டார். நாங்கள் வாக்களித்தோமா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இதற்கான பெரியோர்களின் பொறுப்பை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
மேலும் படிக்க | Karnataka Election 2023: தேர்தல் கணிதத்தை மாற்றக்கூடிய டாப் அம்சங்கள் இவைதான்!!
கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு, மே 13-ம் தேதி முடிவுகள்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. 224 இடங்களுக்கான முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகும். கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மறுபுறம், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கல்புர்கியில் வாக்களித்த பிறகு காங்கிரஸுக்கு 130 முதல் 135 இடங்கள் வரை உரிமை கோரினார். 2018 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தென்னிந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த கர்நாடகாவை கைப்பற்றுவது பாஜகவுக்கு மிகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கர்நாடகா தேர்தல் மூலம் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேலும், இந்த தேர்தலில் ஹெச். டி. குமாரசாமி தலைமையிலான ஜேடி (எஸ்) கட்சியும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன் நடக்கும் இந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் தாக்கம் நாடு முழுவதும் பெருமளவு இருக்கும். இந்த காரணத்தினால்தான் சோனியா காந்தி முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை, அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களும் மாநிலத்தில் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ