தெலுங்கானா மாநிலத்தில் மத்திய அரசின் உதவியுடன் ஐதராபாதில் மெட்ரோ ரயில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது மெட்ரோ ரயில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஐதராபாத் மெட்ரோ சேவையை மியாபூர் ஸ்டேஷனில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஐதராபாத் மெட்ரோ சேவை தொடக்கி வைப்பதுடன் பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய உள்ளனர்.
முதல் கட்டமாக நாகோல் முதல் மியாபூர் வரையிலான சுமார் 30 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை நடைபெறும். இதில் மொத்தம் 24 மெட்ரோ ஸ்டேஷன் இடம் அடங்கும். ஐதராபாத் மெட்ரோ சேவை திட்டம் சுமார் 14,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது. மொத்தம் 72 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் மெட்ரோ சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் வீடியோ:-
#WATCH Live: PM Narendra Modi inaugurates #HyderabadMetro https://t.co/G5vyc2MrmF
— ANI (@ANI) November 28, 2017
#FLASH PM Narendra Modi inaugurates #HyderabadMetro pic.twitter.com/VDbVSYjmPe
— ANI (@ANI) November 28, 2017
PM Narendra Modi to inaugurate #HyderabadMetro; Telangana CM KC Rao also present pic.twitter.com/Gj99bKyaJF
— ANI (@ANI) November 28, 2017