உத்திராகண்ட் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட ஒரு வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் மாநிலத்தின் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து ஒரு தொழிலாளியை இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) பணியாளர்கள் மீட்கும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
'சோர் லககே ஹைஷா' என்ற கோஷங்களுக்கு மத்தியில், தபோவன் அணைக்கு அருகிலுள்ள குறுகிய சுரங்கப்பாதையில் இருந்து ஒருவர் வெளியே இழுக்கப்படுவதைக் காணலாம். மீட்கப்பட்ட நபர் சந்தோஷத்தில் கைகளை தூக்கி குதிக்கும் போது, பலண்சை இழக்கிறார். அவரை மீண்டும் பணியாளர்கள் தூக்கி உற்சாகத்துடன் மீண்டும் கோஷமிடுகின்றனர்.
#WATCH | Uttarakhand: ITBP personnel rescue one person who was trapped in the tunnel near Tapovan dam in Chamoli.
Rescue operation underway.
(Video Source: ITBP) pic.twitter.com/RO91YhIdyo
— ANI (@ANI) February 7, 2021
பின்னர், தபோவன் அருகே சுரங்கப்பாதையில் இருந்து மேலும் 12 தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட பின்னர் ITBP படையினர் 'பத்ரி விஷால் கி ஜெய்' மற்றும் 'நந்தா தேவி கி ஜெய்' என்று கோஷமிட்டனர்.
வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கத்தில் புதைந்த 12 தொழிலாளர்கள் இதுவரை மீட்கப்பட்டனர். இதுவரை ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் இரவு முழுவதும் மேற்கொள்ளப்படும். தப்போவன்-ரெனி மின் திட்டத்தில் பணிபுரிந்து வந்த 125 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது என்று ITBP செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே தெரிவித்தார்.
ரிஷிகங்கா ஆற்றின் 13.2 மெகாவாட் சிறிய நீர் திட்டம் அடித்துச் செல்லப்பட்டு, ஜோஷிமத்தில் உள்ள தவுலி கங்கா ஆற்றின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு மேலே பாய்ந்து வருவதாகவும், இது வரை இந்த மட்டத்தை நீர்மட்டம் தாண்டியதில்லை எனவும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ALSO READ | உத்திரகாண்டில் வெடித்தது பனிப்பாறை.. 2013 போன்ற பேரழிவை நோக்கி செல்கிறதா..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR