கடன் சுமையால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு விஜய் மல்லையா அனுதாபம் தெரிவித்துள்ளார்.
விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன.
இதில் கிங் பிஷர் உள்ளிட்ட ஒரு சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. தற்போது இந்த பட்டியலில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கிங் பிஷர் ஏர்லைன்சுக்கு நேரடி போட்டியாக இருந்தது ஜெட் ஏர்வேஸ். தற்போது கடன் சுமையால் இருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயலுக்கு என் அனுதாபம். என பதிவிட்டுள்ளார்.