கோவை ஆசிரியர் ஸதிக்கு தேசிய நல்லாசிரியர் விருதை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்
ஆண்டு தோறும் செப்டம்ர் 5 ஆம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக கொண்டாப்படுகிறது. அதையொட்டி, ஆசிரியர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து கௌரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் `தேசிய நல்லாசிரியர் விருது' பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர்.
திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும், `குட்டி கமாண்டோ' திட்டம் போன்றவற்றின் மூலம் எண்ணற்ற மாற்றங்களைத் தனது முயற்சியால் பள்ளியில் மாற்றிக்காட்டியுள்ளார் தலைமை ஆசிரியை ஸதி. கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்ற இவருக்குத் தேசிய நல்லாசிரியர் விருது கிட்டியுள்ளது. பலரும் இவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் தெரிவித்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு அவருக்கு நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த விழாவில் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
As the Headmistress of a school in Coimbatore, Ms. R Sathy adopted several community mobilisation activities to increase enrolment. Her innovative strategies helped her local village in becoming ODF. She is also passionate about co-curricular activities. Congratulations to her. pic.twitter.com/P2XOZLnXpY
— Narendra Modi (@narendramodi) September 4, 2018
மேலும், பிரதமர் மோடி தலைமை ஆசிரியை ஸதி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தலைமையாசிரியை ஸதி பல்வேறு சமூக நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளார். இவரின் பல்வேறு முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றியுள்ளார். மேலும், கல்வி சாராத நடவடிக்கைகளிலும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் கோவை ஆசிரியர் ஸதிக்கு தேசிய நல்லாசிரியர் விருதை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
Vice President M Venkaiah Naidu conferred National Teachers’ Awards earlier today in Delhi. #TeachersDay pic.twitter.com/W1pbo3LH9S
— ANI (@ANI) September 5, 2018