மகாத்மா காந்தி அவர்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கம் வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் பரிந்துரைத்துள்ளது!
அமெரிக்க வாழ் இந்தியர்கள் 4 பேர் கொண்ட சட்ட வல்லுநர்கள் குழு கடந்த செப்டம்பர் 23-ஆம் நாள் இதுதொடர்பாக தீர்மானத்தினை கொண்டுவந்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் உறுப்பினர்கள் கரோலின் மலோனி, ஆமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா ஜெயபால், துளசி கப்பார்டு ஆகியோர் இந்த தீர்மனத்தினை கொண்டு வந்துள்ளனர்.
காந்தியின் அகிம்சை, சமாதானம் ஆகிய கொள்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவருக்கு அமெரிக்காவின் உயரிய விருதான நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் வழங்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க அரசால் வழங்கப்படுத் இந்த உயரிய விருதினை புகழ்பெற்ற ஒருசிலர் மட்டுமே பெற்றுள்ளனர். இதற்கு முன்னதாக 1997-ஆம் ஆண்டு அன்னை தெரசாவுக்கும், 1998-ஆம் ஆண்டுநெல்சன் மண்டேலா, 2000-ஆம் ஆண்டு போப் ஜான் பவுல் II, 2006-ஆம் ஆண்டு புத்த துரவி தலாய் லாமா, 2008-ஆம் ஆண்டு ஹாங் சான் சூ கி, 2010-ஆம் ஆண்டு மொகமத் யுனஸ் மற்றும் 2014-ஆம் ஆண்டு சிம்மன் பெர்ஸ் ஆகியோர் மட்டுமே இந்த பதக்கத்தினை பெற்றுள்ளனர்.