கான்பூர் என்கௌன்டர் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான விகாஸ் தூபேவின் (Vikas Dubey) நெருங்கிய உதவியாளரான அமர் தூபே (Amar Dubey) புதன்கிழமை (ஜூலை 8) ஹமீர்பூரில் நடந்த மோதலில் உத்தரபிரதேச போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அமர் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒரு முக்கிய குற்றவாளியாவான். உத்தரபிரதேச (UP) காவல்துறையின் சிறப்பு பணிக்குழு நடத்திய என்கைண்டரில் அமர் கொல்லப்பட்டான். அமர் விகாஸ் துபேயின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக இருந்ததோடு, எப்போதும் தன்னுடன் பல ஆயுதங்களை வைத்திருந்தான்.
எட்டு போலீசார் கொல்லப்பட்ட கான்பூர் என்கௌண்டர் (Encounter) வழக்கில் அமர் ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தான். அமர் மேலும் பல வழக்குகளுக்காகவும் தேடப்பட்டு வந்தான். ஆதாரங்களின்படி, ஹமீர்பூரில் உள்ள உள்ளூர் போலீஸ் பிரிவுடன் ஒருங்கிணைந்து உபி எஸ்.டி.எஃப் அமரைக் கொன்றது. அமர் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு 25,000 ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஃபரிதாபாதிலிருந்து (Faridabad) விகாஸ் துபேயின் நெருங்கிய உதவியாளரை ஹரியானா (Haryana) காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கூடுதல் விவரங்களை வழங்க போலீசார் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளனர். ஃபரிதாபாத்தில் உள்ள செக்டர் 87 இல் விகாஸ் தனது உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
விகாஸ் துபேவுக்கான வேட்டையில் உ.பி காவல்துறை ஹரியானா போலீசாருடன் இணைந்து பணிபுரிந்து வருகிறது. ஹரியானா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விகாசைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள பத்கால் சௌக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சசாரம் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ஹரியானா போலீஸ் குற்றப்பிரிவு சோதனை நடத்தியது. எனினும் போலீசாரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகள், ஹோட்டல் வளாகத்தில் விகாஸ் இருப்பதைக் காட்டியதை அடுத்து காவல்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். ஹோட்டலின் சி.சி.டி.வி காட்சிகளின் டி.வி.ஆர்-ஐ போலீசார் அவர்களுடன் எடுத்துச் சென்றனர்.
ALSO READ: கான்பூர் என்கவுண்டர்: சபேபூர் காவல் நிலையத்தில் இருந்த 68 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
விகாஸ் தூபேவை கைது செய்வதற்கான நடவடிக்கையில் உ.பி. காவல்துறையின் 100 க்கும் மேற்பட்ட அணிகள் ஈடுபட்டுள்ளன. கான்பூரில் துபே மற்றும் அவனது கும்பலை கைது செய்வதற்காக ஜூலை 3 ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது எட்டு போலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். கான்பூருக்கு அருகிலுள்ள பிக்ரு கிராமத்தில் தூபேயின் உதவியாளர்களால் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்ளிட்ட காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலிஸ் குழு மீது அருகில் இருந்த வீட்டு மாடியிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு சிவிலியன் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். ரவுடி (gangster) விகாஸ் தூபேவுக்கு எதிராக சுமார் 60 கிரிமினல் வழக்குகள் உள்ளன.
ALSO READ: Kanpur Encounter: ரவுடி-போலீசார் மோதல்; DSP உட்பட எட்டு உ.பி. போலீசார் பரிதாபமாக மரணம்